ரூ.5,000 கோடி முதலீட்டில் புதிய தொழில் நிறுவனம்… தமிழக அரசு ஒப்புதல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த புதன்கிழமை அன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு மகிழ்ச்சிக்குரிய செய்தியை வெளியிட்டு இருந்தார். அதில் டாடா நிறுவனம் ரூ.5,000 கோடி முதலீட்டில் புதிய தொழில் நிறுவனத்தை தமிழகத்தில் தொடங்க இருப்பதாகக் கூறியுள்ளார். இந்த நிறுவனத்தில் ஆண்ட்ராய்ட் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கும் ஆப்பிள் செல்போனின் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐபோனின் உதிரிப்பாகங்களை உருவாக்குவதற்காக டாடா நிறுவனம் தமிழகத்தில் புதிய நிறுவனத்தை உருவாக்க இருக்கிறது. இதற்காக ரூ.5,000 கோடி முதலீடு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த புதிய நிறுவனத்தினால் பல தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க முடியும் என முதல்வர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
புதிய நிறுவனத்திற்காக டாடா எலக்ட்ரானிக்ஸ் குழுமத்திற்கு 500 ஏக்கர் நிலத்தை டிட்கோ தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் ஒதுக்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனம் ஒசூர் பகுதியில் உள்ள தொழில்துறை வளாகத்திற்குள் அமையும் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகிறது.
மேலும் இந்நிறுவனத்தின் முதலீட்டுத் தொகை ரூ.8,000 கோடியாக அதிகரிக்கலாம் எனவும் கருத்துக் கூறப்படுகிறது. ஆனால் இதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை வெளியாக வில்லை. இந்நிலையில் தமிழகத்திற்கு ரூ.5,000 கோடி முதலீட்டை பெற்றுத் தந்த முதல்வருக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இதனால் பல தமிழக இளைஞர்கள் வேலை வாய்ப்பினை பெற முடியும் எனவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments