பிரதமரின் வேண்டுகோளை ஏற்று மேலும் ரூ.1000 கோடி நிதியுதவி செய்த டாடா
- IndiaGlitz, [Saturday,March 28 2020]
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இந்திய மக்களை காப்பாற்ற மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு உதவிடும் வகையில் டாடா நிறுவனம் மிகப்பெரிய தொகையாக ரூ.500 கோடி நிதியுதவி செய்தது என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம்.
இந்த நிலையில் பாரத பிரதமர் மோடி அவர்கள் சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் மத்திய அரசுக்கு பொதுமக்களும் தொழிலதிபர்களும் தாராளமாக நிதியை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் ஏற்கனவே 500 கோடி நிதி உதவி செய்த டாடா, தற்போது மேலும் ரூ.1000 கோடி நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து அந்நிறுவனம் மட்டும் ரூ.1500 கோடி நிதியுதவி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிதியின் மூலம் மத்திய அரசு மற்றும் மாநில அரசுக்கு தேவையான மருந்துகள், மருத்துவ சாதனங்கள் போன்ற வசதிகளை ஏற்படுத்த முடியும். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றி இருக்கும் பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கவும் உதவியாக இருக்கும்.
மேலும் இந்தியாவின் முன்னணி நிறுவனம் ஒன்று அரசுக்கு ரூ.1500 கோடி நிதியுதவி செய்துள்ளது என்றால் இந்த வைரஸின் தீவிரத்தை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதும் இதன் மூலம் உணர்த்தப்படுகிறது.