தமிழகத்திற்கு டாடா நிறுவனம் செய்த மிகப்பெரிய உதவி
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக ஏற்கனவே மத்திய அரசுக்கு ரூ.1500 கோடி நிதியுதவி செய்த டாடா நிறுவனம் தற்போது தமிழகத்திற்கு என தனியாக மிகப்பெரிய உதவி செய்த தகவல் வெளிவந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் கொரோனா பரிசோதனைக்கான பிசிஆர் கருவிகளை தமிழக அரசின் சுகாதாரத்துறை கடந்த மாதமே ஆர்டர் செய்தது. ஆனால் அந்த கருவிகள் இன்னும் தமிழகத்திற்கு வந்து சேரவில்லை. எனவே கொரோனா பரிசோதனை மந்தமாக நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்திற்கு கொரோனா பரிசோதனைக்கான பிசிஆர் கருவிகளை டாடா நிறுவனம் வழங்கியுள்ளது. ரூ.8 கோடி மதிப்பிலான 40,032 பிசிஆர் கருவிகள் தமிழக அரசிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இனிமேல் கொரோனா தொற்றை மிக எளிதாக கண்டுபிடிக்க இந்த பிசிஆர் கிட் கருவிகள் உதவும் என்றும் கூறப்படுகிறது.
கொரோனா தொற்றை கண்டுபிடிக்க 8 கோடி மதிப்பிலான 40,032 கருவிகளை தமிழக அரசுக்கு டாடா நிறுவனம் வழங்கியுள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் டாடா நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments