தமிழகத்திற்கு டாடா நிறுவனம் செய்த மிகப்பெரிய உதவி

கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக ஏற்கனவே மத்திய அரசுக்கு ரூ.1500 கோடி நிதியுதவி செய்த டாடா நிறுவனம் தற்போது தமிழகத்திற்கு என தனியாக மிகப்பெரிய உதவி செய்த தகவல் வெளிவந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் கொரோனா பரிசோதனைக்கான பிசிஆர் கருவிகளை தமிழக அரசின் சுகாதாரத்துறை கடந்த மாதமே ஆர்டர் செய்தது. ஆனால் அந்த கருவிகள் இன்னும் தமிழகத்திற்கு வந்து சேரவில்லை. எனவே கொரோனா பரிசோதனை மந்தமாக நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்திற்கு கொரோனா பரிசோதனைக்கான பிசிஆர் கருவிகளை டாடா நிறுவனம் வழங்கியுள்ளது. ரூ.8 கோடி மதிப்பிலான 40,032 பிசிஆர் கருவிகள் தமிழக அரசிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இனிமேல் கொரோனா தொற்றை மிக எளிதாக கண்டுபிடிக்க இந்த பிசிஆர் கிட் கருவிகள் உதவும் என்றும் கூறப்படுகிறது.

கொரோனா தொற்றை கண்டுபிடிக்க 8 கோடி மதிப்பிலான 40,032 கருவிகளை தமிழக அரசுக்கு டாடா நிறுவனம் வழங்கியுள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் டாடா நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

More News

கமலின் சூப்பர்ஹிட் பாடலை வித்தியாசமாக மெட்டமைத்து பாடிய ஸ்ருதிஹாசன்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மூன்று வாரங்களுக்கு மேல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் எந்தவித திரைப்பட படப்பிடிப்பும் நடைபெறவில்லை.

இந்தியா முழுவதும் பட்டணி கொடுமையால் வீதிக்கு வரும் அமைப்புச்சாரா கூலித் தொழிலாளர்கள்!!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23 ஆம் தேதி இரவு முதல் அமலுக்கு வந்தது.

உலகச் சுகாதார அமைப்புடன் மோதல் காட்டிவரும் அதிபர் ட்ரம்ப்!!! அடுத்து என்ன???

கொரோனா பரவல் பற்றிய தகவல்களை சீன அரசு மறைத்துவிட்டதாக ஆரம்பம் முதலே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டிவருகிறார்.

கொரோனாவுக்கு நடுவில் தேர்தல் நடத்தும் தென்கொரியா!!! நடைமுறை சாத்தியங்கள்!!!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் பீதியை ஏற்படுத்தி வரும் நிலையில் தென்கொரியா நாடாளுமன்றத் தேர்தலை நடத்திவருகிறது.

மத்தியஅரசு அறிமுகப்படுத்திய “ஆரோக்கிய செயலி”  ஆப் ஏன் விமர்சிக்கப்படுகிறது???

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசால் கடந்த மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட செயலி “ஆரோக்கிய சேது”