பேய்கள் என அழைக்கப்படும் விசித்திர விலங்கினம்… அழிவில் இருந்து தப்புமா???
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்திரேலியாவில் ஒரு விசித்திர விலங்கினத்தை உள்ளூர் மக்கள் பேய்கள் என்றே அழைத்து வருகின்றனர். காரணம் அது எழுப்பும் அபாயகரமான ஒலி. மனிதனின் காதுகளை கிழித்துக் கொண்டு போகும் அளவிற்கு இந்த விலங்கினங்கள் விசித்திரமான ஒலிகளை எழுப்புமாம். மேலும் இந்த விலங்கினத்தின் உணவு முறையும் படு விசித்திரமாகவே இருக்கிறது. உயிரிழந்த உடல்களை கிழித்துக் கொதறி தின்னும் இந்த விலங்குகள் எலும்புகளையும் தூள் தூளாக்கி விடுமாம்.
தனது தாடைப் பகுதிகளில் காணப்படும் வலுவான பற்களைக் கொண்டு எப்பேர்பட்ட எலும்புகளாக இருந்தாலும் மென்று முழுங்கி விடுகிறது. ஆனால் இந்த விலங்குகளிடம் உள்ள ஒரு மிகப்பெரிய ஆச்சர்யம் இதுவரை மனிதர்களுக்கோ அல்லது விவசாயத்திற்கோ இந்த வகை விலங்குகள் எந்த தீங்கும் ஏற்படுத்தியதே இல்லை என்று கூறப்படுகிறது. டாஸ்மானியா பேய்கள் என அழைக்கப்படும் இந்த விசித்திர விலங்கினம் தற்போது அழிவின் விளிம்பில் இருப்பதாக விலங்குநல ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதனால் கடந்த 3,000 ஆயிரம் வருடங்களாக ஆஸ்திரேலியாவின் காடுகளில் இந்த விசித்திர விலங்கினம் பாதுகாக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு தற்போது இந்த விலங்குகள் பொதுவெளியில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளதகாவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சிட்னி நகருக்கு வடக்கில் இருக்கும் பாரிங்டன் டாப்ஸ் எனும் தேசிய பூங்காவில் இந்த பேய் விலங்குகளை பாதுகாப்பு குழுக்கள் விட்டுச் சென்றுள்ளனர்.
கடந்த மார்ச் மாதத்தில் 15 டாஸ்மானியப் பேய்கள் தேசியப் பூங்காவில் வைக்கப்பட்டது. அந்த விலங்குகள் சூழலோடு ஒத்துப் போவதைப் பார்த்த அதிகாரிகள் மேலும் 11 விலங்குகளை அந்தப்பூங்காவில் வைத்து இருக்கின்றனர். மேலும் 40 டாஸ்மானிய பேய்கள் அந்த பூங்காவிற்கு கொண்டு வரப்படும் எனவும் கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய காடுகளில் 3 ஆயிரம் ஆண்டுகளாக வசித்து வரும் இந்த விலங்குகள் அந்நாட்டில் மட்டும் 25 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த 1990 களில் இந்த விலங்குகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரமாக இருந்த நிலையில் அவைகளை கொடுமையான வாய் புற்றுநோய் தாக்கியதாகவும் அதனால் எண்ணிக்கை பல மடங்காக குறைந்து போனதாகவும் அந்நாட்டு விலங்கு நல ஆர்வலர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். இதனால் குறைந்த போன அதன் எண்ணிக்கையைப் பெருக்குவதற்கு தற்போது சிட்னி நகரில் உள்ள பல்லாயிரக் கணக்கான பரப்பளவு கொண்ட பூங்காவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அதன் எண்ணிக்கை உயரும் எனவும் நம்பப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments