குடிமகன்களுக்கு வந்த புது சோதனை…  டாஸ்மாக்குக்கு 3 நாள் லீவா??? களைக்கட்டும் மீம்ஸ்!!!

  • IndiaGlitz, [Wednesday,January 06 2021]

 

ஒரே ஒரு நாள் டாஸ்மாக்கு லீவு விட்டாலும் குடிமகன்களின் பாடு திண்டாட்டமாகிவிடும். இந்நிலையில் இந்த ஜனவரி மாதம் மட்டும் தமிழக டாஸ்மாக்குக்கு 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட இருக்கிறது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது. இதனால் குடிமகன்களுக்காக பல்வேறு மீம்ஸ்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இதனால் இந்த நாட்களைத் தெரிந்து கொண்டு அதற்கு முன்னதாகவே பாட்டில்களை வாங்கி அடுக்கி விடலாம் என்ற சிந்தனையும் பலருக்கு வந்திருக்கும்.

“மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு” என்ற பிரச்சாரம் வெறுமனே திரைக்கு மட்டும்தான் போல. இந்த வாசகத்தை எல்லாம் நம் குடிமகன்கள் ஒருபோதும் பொருட்படுத்துவதே இல்லை. கொரோனா நேரத்தில் மூடப்பட்டு இருந்த டாஸ்மாக்கு பதிலாக பல்வேறு கள்ளச்சாரயக் கடைகளை திறந்து அதனால் பல மாநிலங்களில் உயிரிழப்பு ஏற்பட்ட விபரீதத்தையும் பார்க்க முடிந்தது. இந்நிலையில் மது ஒழிப்பு என்ற வாசகத்தை கனவு உலகத்தில் தான் பார்க்க முடியும் என்ற முடிவிற்கு பெரும்பாலானோர் வந்து விட்டனர்.

இத்தனை ஆக்ரோஷமான மனிதர்களுக்கு மத்தியில் நம் தமிழக அரசு மது ஒழிப்பு குறித்த பிரச்சாரத்திலும் அவ்வபோது ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் வரும் ஜனவரி 15 (திருவள்ளூர் தினம்), ஜனவரி 26 (குடியரசு தினம்), ஜனவரி 28 (வடலூர் ராமலிங்கர் நினைவு தினம்) ஆகிய 3 நாட்களும் தமிழக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட இருக்கின்றன. இத்தினத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது. அதனால் அதற்கு முன்னதாகவே பாட்டில்களை அடுக்கி வைத்துவிட வேண்டும் என்ற முடிவோடு பலரும் வந்து விட்டனர்.

இந்நிலையில் மீம்ஸ் கிரியேட்டர்களின் கவனத்தையும் இந்தத் தகவல் ஈர்த்து இருக்கிறது. இதையடுத்து பல்வேறு கண்ணீர் வடிக்கும் மீம்ஸ்களை கிரியேட்டர்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். அதில் ஒன்று சார் அந்த ரேசன் கடையில் குடுத்த 2500 திரும்ப வேணாமா?? என வடிவேலு பாணியில் வெளியாகி இருக்கும் மீம்ஸ் தமிழக அரசையே கிண்டல் செய்வது போலவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இதேபோல வெளிவந்து இருக்கும் மற்றொரு மீம்ஸ் எக்ஸ்ட்ரா இன்னொரு பாட்டில் எதுக்குன்னுதான சந்தேகம்.. மம்முட்டி பாணியில் உங்களால தெரிஞ்சிக்காம இருக்க முடியல அப்படி தானே… சொல்ற இநத் மாசம் 3 நாள் கடை லீவு அதுக்குத்தான் வாங்கி வச்சிருக்கே… இந்த மீமும் வைரலாகி இருக்கிறது.

அதேபோல “இதெல்லாம் டெய்லி ஒயின்ஷாப் போய் குடிக்கிறவன் வருத்தப்படணும்… ஒயின்ஷாப் லீவ் சொன்ன ஒரு வாரத்துக்கு முன்னாடியே சரக்கு வாங்கி சேர்த்து வைக்கிற நாங்க ஏன் ஃபீல் பண்ணனும்” எனக்கூறும் வடிவேலு பாணியிலும் ஒரு மீம் வெளியாகி இருக்கிறது. இந்த மீம்ஸ் வரிசைகளைப் பார்க்கும்போது மது விழிப்புணர்வு யாருக்கு என்ற சந்தேகம்தான் வருகிறது.