டாஸ்மாக் கடைகள் திறப்பு: முதல் டோக்கன்களை வாங்கிய ஸ்பெயின் குடிமகன்கள்
- IndiaGlitz, [Thursday,May 07 2020]
சென்னை தவிர தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை அடுத்து கடந்த 40 நாட்களாக குடிக்காமல் இருந்த குடிமகன்கள் இன்று காலை முதலே டாஸ்மாக் கடைமுன் ஆயிரக்கணக்கில் குவிய வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது
இந்த நிலையில் கூட்டம் கூடுவதை தவிர்க்க முதலில் டோக்கன் வழங்கப்பட்டு அதன்பின் மதுபாட்டில்கள் வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது டோக்கன் கொடுக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது
இந்த நிலையில் கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் ஸ்பெயின் குடிமகன்கள் இருவர் முதல் இரு டோக்கன்களை பெற்றுள்ளனர். ஸ்பெயினில் இருந்து கோவை வந்த கோர்சே, பெர்பைன் ஆகிய இருவர் முதல் இரு டோக்கன்களை பெற்று மது பாட்டில்களை வாங்க வரிசையில் நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நம்மூர் குடிமகன்களை மிஞ்சி முதல் இரு டோக்கன்களை பெற்ற ஸ்பெயின் குடிமகன்களால் கோவையில் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது