4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு: குடிமகன்கள் அதிர்ச்சி!

  • IndiaGlitz, [Monday,March 29 2021]

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நான்கு நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என ஆயத்தீர்வை ஆணையர் கடிதம் ஒன்றை அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால் ஏப்ரல் 4, 5, 6 ஆகிய மூன்று தினங்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை தினமான மே 2-ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகள் இயங்காது என உத்தரவிடப்பட்டுள்ளது

இந்த நிலையில் முன்கூட்டியே மது பாட்டில்களை வாங்கி பதுக்குவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு ஆயத்தீர்வை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்

ஏப்ரல் 4ஆம் தேதி காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 6-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் அதேபோல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ஆம் தேதி முழுவதுமாக மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.