சென்னையில் டாஸ்மாக் திறக்கும் தேதி அறிவிப்பு!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வந்ததால் டாஸ்மாக் கடைகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த மே மாதம் 16ஆம் தேதி முதல் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது.

இருப்பினும் சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருந்ததால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வருவதை அடுத்து சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 18ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்றும், சென்னையில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் எனவும் அறிவிப்பு டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் சென்னை குடிமகன்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் டாஸ்மாக் திறப்பதில் அவசரம் காட்ட வேண்டாம் என சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து கூறி வருகின்றனர்.
 

More News

எஸ்பிபி குறித்த மகிழ்ச்சியான செய்தி தெரிவித்த எஸ்பிபி சரண்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்

இவர்கள் தான் நிஜ ஹீரோக்கள்: சைலேந்திரபாபு வெளியிட்ட பரபரப்பு வீடியோ

தமிழ்நாடு தீயணைப்பு துறையின் ஐஜியாக இருக்கும் சைலேந்திரபாபு அவர்கள் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருவது தெரிந்ததே.

சூர்யா ரிலீஸ் செய்த டிரைலர்: 28ஆம் தேதி ஓடிடியில் வெளியீடு

தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களாக கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதும்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்: அதிர்ச்சி தகவல்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

லோகேஷ் கனகராஜ் ஹீரோவின் மறைமுக திருமண அறிவிப்பா இது? பரபரப்பு தகவல்

தமிழ் திரைப்பட ஹீரோ ஒருவர் தனது திருமணம் குறித்த மறைமுக அறிவிப்பை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது