தமிழகம் முழுவதும் மூடப்படுகிறது டாஸ்மாக்: அதிரடி அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஆறாம் கட்ட ஊரடங்கு இன்று முதல் இம்மாதம் 31-ஆம் தேதி வரை நீடிப்பதாக சமீபத்தில் தமிழக அரசு அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அதுமட்டுமின்றி இம்மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் அதாவது ஜூலை 5, ஜூலை 12, ஜூலை 19, மற்றும் ஜூலை 26 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. முழு ஊரடங்கான 4 நாட்களிலும் பால், மருத்துவமனை, ஆம்புலன்ஸ், மெடிக்கல் ஸ்டோர் ஆகியவை தவிர வேறு எந்த எதற்கும் அனுமதி இல்லை.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய அறிவிப்பின்படி ஜூலை மாதத்தில் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout