தமிழகம் முழுவதும் மூடப்படுகிறது டாஸ்மாக்: அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஆறாம் கட்ட ஊரடங்கு இன்று முதல் இம்மாதம் 31-ஆம் தேதி வரை நீடிப்பதாக சமீபத்தில் தமிழக அரசு அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமின்றி இம்மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் அதாவது ஜூலை 5, ஜூலை 12, ஜூலை 19, மற்றும் ஜூலை 26 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. முழு ஊரடங்கான 4 நாட்களிலும் பால், மருத்துவமனை, ஆம்புலன்ஸ், மெடிக்கல் ஸ்டோர் ஆகியவை தவிர வேறு எந்த எதற்கும் அனுமதி இல்லை.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய அறிவிப்பின்படி ஜூலை மாதத்தில் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் ஜூலை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

More News

தமிழகத்தில் ஒரு லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு: இன்றைய பாதிப்பு எவ்வளவு?

தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக கொரோனாவின் பாதிப்பு 3000க்கும் அதிகமாக இருந்து வரும் நிலையில் இன்றும் 5வது நாளாக 3000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது

சாத்தான்குளம் சம்பவம்: தளபதி விஜய் தரப்பில் இருந்து வந்த எதிர்ப்பு குரல்

சாத்தான்குளம் தந்தை மகன் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில் லாக்கப் மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ள நிலையில் இதுகுறித்து தமிழ் திரையுலக பிரமுகர்கள் பலர்

அரை நிர்வாண உடலில் பெயிண்டிங்: சபரிமலை பெண் போராளி மீது நடவடிக்கை எடுத்த பி.எஸ்.என்.எல்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று போராடிய பெண் போராளி ரெஹானா பாத்திமா என்பவர் சமீபத்தில் அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து தனது குழந்தைகளையே

சொந்த கட்சியினரே வைத்த சூன்யம்: நேபாள பிரதமர் பதவிக்கு ஆபத்து!!!

நேபாளத்தின் தற்போதைய பிரதமர் கே.பி. ஷர்மா ஒளி. இவரை பதவியில் இருந்து விலகுமாறு சொந்தக் கட்சியினரே வலியுறுத்தும் நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.

புகார் அளிக்க பெண் முன் சுய இன்பம்: வைரலான வீடியோவால் காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட்

சொத்து பிரச்சனை தொடர்பாக காவல் துறைக்கு புகார் அளிக்க வந்த பெண் முன், சுய இன்பம் செய்த போலீஸ் அதிகாரி ஒருவரின் வீடியோ வைரல் ஆனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது