ஒரே நாளில் 150 கோடி வசூல்: டாஸ்மார்க் செய்த உச்சகட்ட சாதனை 

கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள காரணத்தால் வேலையின்றி, வருமானம் இன்றி பொதுமக்கள் தவித்த நிலையில் அரசு அவர்களுக்காக ஆயிரம் ரூபாய் நிதி உதவி செய்து அரிசி பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த ஆயிரம் ரூபாய் போதாது என்றும் பொதுமக்களுக்கு கூடுதலாக அரசு பணம் கொடுக்க வேண்டும் என்றும் எதிர் கட்சியினர் வலியுறுத்தி வந்தனர்

இந்த நிலையில் நேற்று முதல் மதுக்கடைகள் தமிழகத்தில் திறக்கப்பட்டது. சாப்பாடுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கூட காசில்லை என்று கூறிக் கொண்டிருந்த பொதுமக்கள், நேற்று ஒரே நாளில் சுமார் 150 கோடி ரூபாய்க்கு மதுபானங்களை டாஸ்மாக்கில் வாங்கி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு மாதங்களாக வருமானம் இன்றி கையில் காசு இல்லாமல் இருந்த பொதுமக்கள் எப்படி 150 கோடிக்கு மது பானங்களை வாங்கி உள்ளார்கள் என்ற திகைப்பு இன்னும் நீங்கவில்லை

வழக்கமாக தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 70 கோடி முதல் 80 கோடி ரூபாய்க்கு மட்டுமே மதுபானங்கள் விற்பனை ஆகும். ஆனால் 40 நாட்கள் கழித்து திறக்கப்பட்ட டாஸ்மாக்கில் ஒரே நாளில் இரு மடங்கு மது விற்பனையாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் விற்பனையாவதை விட அதிகமான நேற்று ஒரே நாளில் மது விற்பனையாகி புதிய உச்சம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மதுவுக்கு எதிரான விழிப்புணர்ச்சி, மதுக்கடைகளை திறப்பதற்கு எதிரான கருப்பு பேட்ஜ் அணிந்த போராட்டம் என இவை எதையும் கண்டுகொள்ளாமல் மதுபிரியர்கள் மதுக்களை வாங்கிக் குடித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் மதுவிலிருந்து இந்த மக்களை மீட்க முடியுமா என்பது சந்தேகமே என்றும் சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்
 

More News

ஊரடங்கால் அதிக கர்ப்பம்: இந்தியாவில் 2.1 கோடி குழந்தைகள் பிறக்க வாய்ப்பு என ஐநா தகவல்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல்கட்ட ஊரடங்கும், ஏப்ரல் 15ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட ஊரடங்கும், அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மே 4ஆம் தேதி முதல்

சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 4 பேர் பலி: தமிழக பலி எண்ணிக்கை 41ஆக உயர்வு

கொரோனா வைரஸால் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மிக அதிகமான பாதிப்பு இருந்தாலும் உயிரிழப்பு மிகவும் குறைவாக இருந்தது ஆறுதலான செய்தியாக இருந்தது.

சொந்த ஊரை நோக்கி நடந்து சென்ற தொழிலாளர்கள் மீது மோதிய ரயில்: 17 பேர் பரிதாப பலி

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த சுமார் இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து, நாடு முழுவதும் எந்த போக்குவரத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளையரை வெளியேற்றிய நமக்கு, கொள்ளையரையும்‌ வெளியேற்றும்‌ காலம்‌ நெருங்கிவிட்டது: கமல்ஹாசன்

உலக நாயகன் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவ்வபோது தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஆவேசமான அரசியல் கருத்துக்களை தெரிவித்து வரும்

கொரோனாவின் 53 புதிய மரபணு வரிசைகளை வெளியிட்ட இந்திய விஞ்ஞானிகள்!!!

கொரோனா வைரஸ் பரவல் பற்றிய தன்மைகளைப் புரிந்து கொள்ள உலகம் முழுவதும் ஆய்வுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.