சென்னையில் டாஸ்மாக் திறக்கப்படுகிறதா? பரபரப்பு தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இந்த ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் அளிக்கப்பட்ட தளர்வுகள் எதுவும் சென்னைக்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்று முதல் தமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடினாலும் சென்னையில் மட்டும் பேருந்து ஓட வில்லை என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த மாதம் 16ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் சென்னையில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது சென்னையில் உள்ள ஒரு சில டாஸ்மாக் கடைகளில் தடுப்பு உள்ளிட்ட சமூக இடைவெளிக்கான வேலைகள் நடைபெற்று வருவதால் விரைவில் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
சென்னையில் ஏற்கனவே 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளை திறந்தால் மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் டாஸ்மாக் கடைகளை சென்னையில் திறக்கக்கூடாது என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கைகள் ஏற்கப்படுமா? அல்லது தமிழகத்தின் மற்ற பகுதியை போல சென்னையிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout