டாஸ்மாக் கடையின் பூட்டு உடைப்பு: லட்சக்கணக்கான மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை

திருச்சி அருகேயுள்ள உறையூரில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுபானங்கள் கிடைக்காமல் குடிமகன்கள் பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் டாஸ்மாக் ஒரு சில இடங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை உடைத்து கொள்ளை அடிக்க வாய்ப்பு இருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அவர்கள் எச்சரித்தது போலவே தற்போது திருச்சி அருகேயுள்ள உறையூர் என்ற பகுதியில் பூட்டப்பட்டு இருந்த டாஸ்மாக் கடையை கடையின் பூட்டை உடைத்து பல லட்ச ரூபாய் மதுபாட்டில்களை மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதனை அடுத்து தமிழககதில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளில் உள்ள ஸ்டாக்குகளை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற டாஸ்மாக் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

More News

டெல்லி கூட்டத்தில் பங்கேற்ற 1500 தமிழர்களில் 16 பேர்களுக்கு கொரோனா: மீதமுள்ளவர்களுக்கு?

டெல்லியில் சமீபத்தில் தனியார் அமைப்பு சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

எங்களின் உயிரைக் காப்பாற்றுங்கள்! பிரபல இயக்குனரின் நீண்ட பதிவு

கொரோனா வைரஸ் இந்தியாவில் மிக தீவிரமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸ் இந்தியாவுக்குள் எப்படி நுழைந்தது, அரசு எங்கெங்கே கோட்டை விட்டது, ஊடகம் இதற்கு முக்கியத்துவம் தராமல்

வீடு தேடி வரும் அத்தியாவசிய பொருட்கள்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் மட்டும் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது 

ஒரு மாலை வாங்க கூட முடியவில்லை: பரவை முனியம்மா இறுதிச்சடங்கு குறித்துஒரு நடிகரின் நெகிழ்ச்சியான பதிவு

கிராமத்து பாடல்களை பாடும் பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா, நேற்று அதிகாலை காலமான நிலையில் கொரோனா அச்சம் காரணமாக ஒருசிலர் மட்டுமே

டீ குடித்தால் கொரோனா போகுமா??? தொடரும் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி!!!

கொரோனா பரவத்தொடங்கியதில் இருந்து அதற்கான மருந்து பொருட்களைப் பற்றிய வதந்திகளும் அதிகமாகி கொண்டே வருகின்றன