தமிழக டாஸ்மாக்கில் இனி கடனாகக்கூட மதுவாங்க முடியும்… அதிரடி காட்டும் புதுவசதி!!!
- IndiaGlitz, [Tuesday,August 11 2020]
சென்னை உயர்நீதிமன்றம் தமிழக டாஸ்மாக் கடைகளில் மின்னணு விற்பனை முறையை கொண்டுவர வேண்டும் என கடந்த மே மாதத்தில் தீர்ப்பு வழங்கியிருந்தது. அந்த அடிப்படையில் தமிழக டாஸ்மாக் கடைகளில் மின்னணு எந்திரத்தைப் பயன்படுத்தி விற்பனை முறையில் மாற்றம் செய்யப்படும் என தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் இயக்குநர் கிர்லோக் குமார் குறிப்பிட்டுள்ளார். இதற்காக 7 வங்கிகளிடம் மின்னணு எந்திரங்களுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதற்கான பணிகள் 2 மாதங்களில் முடிவடைந்து விடும் எனவும் கிரிலோக் குமார் கூறியுள்ளார். டாஸ்மாக் கடைகளில் மின்னணு எந்திர விற்பனை நடைமுறைக்கு வந்தால் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு டாஸ்மாக் கடைகளில் மது வாங்கமுடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் டெபிட் கார்ட்டு, யுபிஐ, பீம் யுபிஐ, யுபிஐ க்யூ ஆர்கோட், கிரெடிட் கார்ட்டு, இண்டர்நேஷனல் கார்ட்டு போன்ற கார்டுகளைப் பயன்படுத்தி டாஸ்மாக் கடைகளில் மது வகைகளை வாங்கலாம். இதற்காக பணியாளர்களுக்கு மின்னணு இயந்திரங்களை பயன்படுத்தவும் பயற்சி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 5,330 மதுபானக் கடைகளிலும் மின்னணு எந்திர விற்பனை கொண்டுவரப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தக் கடைகளில் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி கடனாகவும் மதுவகைகளை வாங்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதில ஐசிஐசிஐ வங்கி குறைந்த விலையிலான ஒப்பந்தப் புள்ளிகளுடன் தமிழக டாஸ்மாக் கடைகளில் மின்னணு மது விற்பனை எந்திரங்களை அமைக்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.