ஆபாச மெசேஜ் அனுப்பிய ஜொல்லருக்கு நாகரீகமாக பதிலடி கொடுத்த டாப்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த 'ஆடுகளம்' படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமாகிய நடிகை டாப்சி, அதன் பின் அஜித்தின் 'ஆரம்பம்', ஐஸ்வர்யா தனுஷின் 'வை ராஜா வை' உள்பட பல படங்களில் நடித்தார். இவர் இந்தியில் நடித்து சூப்பர் ஹிட்டாகிய 'பிங்க்' படம் தான் தற்போது 'தலா 59 படமாக உருவாகவுள்ளது.
இந்த நிலையில் டாப்சியின் சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு ஜொல்லர், 'உங்களுடைய உடல் பாகங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்' என்று ஆபாசமான மெசேஜ் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இந்த மெசேஜை பார்த்து கோபப்படாமல் அவருக்கு பதிலடி கொடுத்துள்ள டாப்சி கூறியபோது, 'ஆமாம், எனக்கும் எனது உடல் அங்கங்கள் ரொம்ப பிடிக்கும். குறிப்பாக எனது செரிப்ரம் எனக்கு பிடித்த அங்கம். உங்களுக்கு பிடித்த அங்கம் எது?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மனிதனின் உடலில் உள்ள பெருமூளையத்தான் செரிப்ரம் என்று அழைப்பதுண்டு. இந்த அங்கம் நல்ல நிலையில் இருந்தால்தான் நினைவாற்றல், சுய கட்டுப்பாடு, நல்லது கெட்டதை பகுத்து செய்யும் அறிவு ஆகியவை வேலை செய்யும். இது சரியாக வேலை செய்யாதவர்களைத்தான் மனநிலை குறைந்தவர் என்றூ கூறுவதுண்டு. தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியவரை மனநிலை சரியில்லாதவர் என்று மறைமுகமாக குறிக்கும் வகையில் டாப்சி பதிலடி கொடுத்துள்ளது அவரது புத்திசாலித்தனத்தை காட்டுவதாக ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.
Wow! I like them too. BTW which is your favourite ? Mine is the cerebrum. https://t.co/3k8YDbAL64
— taapsee pannu (@taapsee) December 17, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments