சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தில் இரண்டு நாயகிகள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு 2', 'ஏ1' ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது அவர் 'ஜெயம் கொண்டான்', 'வந்தான் வென்றான்', 'சேட்டை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 10 நாட்களுக்கு முன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் நவம்பர் இறுதிக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் சந்தானம் ஜோடியாக இரண்டு நாயகிகள் நடிக்கவிருப்பதாகவும் அவர்களில் ஒருவர் ‘ஏ1’ படத்தின் நாயகி தாரா அலிஷா என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னொரு நாயகி ஸ்வாதி என தகவல்கள் வெளிவந்துள்ளது.
தாரா இந்த படத்தில் டாக்டர் கேரக்டரிலும் ஸ்வாதி தொழிலதிபர் கேரக்டரிலும் நடித்து வருவதாகவும் இருவருக்கும் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அவரவர் கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments