சிபிஎஸ்இ பாடத்திட்ட குறைப்பிற்கு அஜித், தனுஷ் பட நடிகை கண்டனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வரும் கல்வியாண்டு குறையும் என்பதால் மாணவா்களின் கல்விச் சுமையை குறைக்க சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்கப்படுவதாக நேற்று அறிவித்தது. 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை இந்த பாடத்திட்ட குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், பாடக்குறைப்பு என்பது இந்த கல்வியாண்டுக்கு மட்டுமே என்றும் சிபிஎஸ்இ அறிவித்தது.
மேலும் இந்த பாடக்குறைப்பு என்பது ஜனநாயக உரிமைகள், மதச்சார்பின்மை, உணவு பாதுகாப்பு, இந்திய அரசமைப்பின் கட்டமைப்பு, ஜாதி, மதம், பாலினம் ஆகிய பாடங்களாக இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கமல்ஹாசனும் இதுகுறித்து தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் தனுஷ் நடித்த ‘ஆடுகளம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின் அஜித்தின் ‘ஆரம்பம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவரும் தற்போது பாலிவுட்டின் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருக்கும் நடிகை டாப்சி இதுகுறித்து கூறியதாவது:
’ஏதேனும் அதிகாரபூர்வ அறிவிப்பை நான் தவறவிட்டு விட்டேனா? அல்லது இவை எல்லாம் எதிர்காலத்துக்குத் தேவைப்படாதா? கல்வியில் சமரசம் செய்துகொண்டால் எதிர்காலம் என்பது இருக்காது’ என்று தெரிவித்துள்ளார். டாப்சியின் இந்த டுவீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
wah wah ???????? is there an ‘official’ declaration of any sort I missed ? Ya future mein ab iski zarurat nahi hai ?
— taapsee pannu (@taapsee) July 8, 2020
If education is compromised with, there will be NO FUTURE ! https://t.co/oJ0TfxWWvM
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments