ஸ்மார்ட்போன் கூட வாங்க முடியாத மாணவிக்கு ஐபோன் அனுப்பிய தமிழ் நடிகை!
- IndiaGlitz, [Saturday,August 01 2020]
நீட் தேர்வுக்கு தயார் செய்ய ஸ்மார்ட்போன் கூட வாங்க முடியாமல் கஷ்டப்பட்ட மாணவி ஒருவருக்கு தமிழ் நடிகை ஒருவர் ஐபோன் வாங்கி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நடிகர் சோனு சூட் கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்து வருகிறார் என்பது குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அதேபோல் தற்போது தமிழில் ’ஆடுகளம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் டாப்ஸி, ஏழை மாணவி ஒருவருக்கு ஐபோன் வாங்கி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பலர் வேலையின்றி வருமானம் இன்று இருப்பதால் தங்கள் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் படிக்க ஸ்மார்ட்போனை கூட வாங்கி தர முடியாத நிலையில் பலர் உள்ளனர். இந்த நிலையில் பெங்களூரைச் சேர்ந்த மாணவி ஒருவர் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருந்தார் அவரது பெற்றோர் நகைகளை அடமானம் வைத்து அவருக்கு கல்வி கட்டணத்தை கட்டி உள்ளனர். அதனால் நீட் தேர்வுக்கு தயாராக ஸ்மார்ட்போன் வாங்க முடியாமல் அந்த மாணவி தவிர்த்துள்ளார்
இந்த நிலையில் இது குறித்து ஊடகங்கள் மூலம் தகவல் அறிந்த நடிகை டாப்ஸி உடனே அந்த மாணவிக்கு உதவ முன்வந்தார். ஸ்மார்ட் போன் கூட வாங்க வழியில்லாமல் இருந்த மாணவிக்கு ஐபோன் ஒன்றை வாங்கி அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இது குறித்து அந்த மாணவி கூறியதாவது ’எனக்கு நடிகை டாப்சி மேடம் ஐபோன் வாங்கி அனுப்பியுள்ளார். என்னால் நம்பவே முடியவில்லை. ஐபோன் வாங்கிவேன் என்று நான் கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. கண்டிப்பாக நான் நீட் தேர்வில் டாப்ஸி மேடம் ஆசியால் வெற்றி பெறுவேன் என்று அவர் கூறியுள்ளார்
இதுகுறித்து நடிகை டாப்சி கூறியபோது ’பெண்கள் அதிகமான அளவு கல்வி கற்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் படிக்க வேண்டும். நமக்கு அதிகமான டாக்டர்கள் தேவை. அதனால் என்னுடைய சிறு முயற்சி’ என்று குறிப்பிட்டுள்ளார் இதனை அடுத்து நடிகை டாப்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
We need more girls to study. We need every child to study. We need more doctors. This is my small effort in making sure our country has a better tomorrow. Thank you for facilitating it :)
— taapsee pannu (@taapsee) July 30, 2020