சினிமா பின்புலம் இல்லாதவர்களுக்காக இதை செய்கிறேன்.....! டாப்ஸி புது முயற்சி.....!
- IndiaGlitz, [Thursday,July 15 2021]
முன்னணி நடிகையான டாப்ஸி, சினிமாவில் பின்புலம் இல்லாதவர்களுக்காக, புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார்.
ராஷ்மி ராக்கெட், லூப் லாபேடா, டோபாரா, சபாஷ் மிது உள்ளிட்ட திரைப்படங்கள் டாப்ஸி நடிப்பில் திரையில் வெளியாகவுள்ளன. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனான மிதாலி ராஜ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கூறும் படம்தான் சபாஷ் மிது. திரைத்துறையில் டாப்ஸி 11 வருடங்கள் பணியாற்றியுள்ளார். இதையொட்டி சினிமாவில் பின்புலம் இல்லாதவர்களுக்காக டாப்ஸி அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார்.
இந்த தயாரிப்பு நிறுவனம் குறித்து டாப்ஸி கூறியிருப்பதாவது,
நான் திரைத்துறைக்கு வந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ரசிகர்கள் எனக்கு பல ஆதரவை தந்துள்ளனர். சினிமா மீதான அன்பை என் தயாரிப்பு நிறுவனம் மூலம் பன்முகப்படுத்துவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.இந்நிறுவனம் மூலம் சினிமாத்துறையில் பின்புலம் இல்லாதவர்களுக்கு உதவுவதே, இதன் நோக்கமாகும். திறமையாளர்களுக்கு வாய்ப்பு அளிப்பதே என் கடமையாகும். இந்நிறுவனத்தின் முதல் திரில்லர் கதையில் நான் தான் கதாநாயகியாக நடிக்கிறேன் என்று அவர் கூறினார். டாப்ஸி குறித்த ஹேஸ்டேக்குகள் காலை முதல் டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.