டாப்சியின் அடுத்த தமிழ்ப்படம்.. கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் ரூ.10 கோடி செலவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை டாப்ஸி, தனுஷ் நடித்த ’ஆடுகளம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானாலும் தற்போது அவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உள்ளார் என்பது தெரிந்ததே. இருப்பினும் அவர் தமிழில் அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ’கேம் ஓவர்’ என்ற படத்தில் நடித்த அவர், அதன் பிறகு 'அனபெல் சேதுபதி’ என்ற படத்தில் நடித்தார். இந்த நிலையில் தற்போது அவர் ஒரு தமிழ் படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
‘அலையன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ’கே 13’ என்ற படத்தை இயக்கிய பரத் நீலகண்டன் இயக்கி வருகிறார். ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் அதிகமாக கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதாகவும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டுமே 10 கோடி ரூபாய் தயாரிப்பு நிறுவனம் செலவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவின் ஒரு பகுதியில் வேற்று கிரக மனிதர்களான ‘அலையன்ஸ்’ இருப்பதாகவும், அவர்களால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் வேற்று கிரக மனிதராக டாப்சி நடிக்கவில்லை என்பதை அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments