close
Choose your channels

செல்வராகவன் - சந்தானம் படத்தின் நாயகி

Monday, December 19, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக புரமோஷன் ஆகியுள்ள சந்தானம், பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கின்றார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் செல்வராகவன் - சந்தானம் இணையும் படத்திற்கு 'மன்னவன் வந்தானடி' என்ற டைட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதே டைட்டிலில் கடந்த 1975ஆம் ஆண்டு சிவாஜிகணேசன், மஞ்சுளா நடிப்பில் ஒரு படம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் நாயகியாக பிரபல நடிகை டாப்சி நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைப்பார் என்றும் கூறப்படுகிறது.

செல்வராகவன் தற்போது 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணியில் பிசியாக உள்ளார். இந்த பணிகள் முடிந்ததும் அவர் 'மன்னவன் வந்தானடி' படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சந்தானம் தற்போது 'சர்வர் சுந்தரம்', ஓடி ஓடி உழைக்கணும், சக்கை போடு போடு ராஜா' ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment