செல்வராகவன் - சந்தானம் படத்தின் நாயகி

  • IndiaGlitz, [Monday,December 19 2016]

நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக புரமோஷன் ஆகியுள்ள சந்தானம், பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கின்றார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் செல்வராகவன் - சந்தானம் இணையும் படத்திற்கு 'மன்னவன் வந்தானடி' என்ற டைட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதே டைட்டிலில் கடந்த 1975ஆம் ஆண்டு சிவாஜிகணேசன், மஞ்சுளா நடிப்பில் ஒரு படம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் நாயகியாக பிரபல நடிகை டாப்சி நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைப்பார் என்றும் கூறப்படுகிறது.

செல்வராகவன் தற்போது 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணியில் பிசியாக உள்ளார். இந்த பணிகள் முடிந்ததும் அவர் 'மன்னவன் வந்தானடி' படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சந்தானம் தற்போது 'சர்வர் சுந்தரம்', ஓடி ஓடி உழைக்கணும், சக்கை போடு போடு ராஜா' ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஆஸ்கார் கிடைக்கவில்லை என்றாலும் அனுபவம் கிடைத்தது. வெற்றிமாறன்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த 'விசாரணை' திரைப்படம் தேசிய விருதுகளை அள்ளியது...

பொங்கல் போட்டியில் இணைந்த விஜய்சேதுபதி படம்

வரும் பொங்கல் தினத்தில் இளையதளபதி விஜய்யின் 'பைரவா' உள்பட 7 படங்கள் வெளியாகவுள்ள நிலையில்...

தனுஷின் 'விஐபி 2'வை அடுத்து மேலும் ஒரு 2ஆம் பாக படம்

தனுஷ் நடித்த சூப்பர் ஹிட் படமான 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது என்பதும்...

2 சிம், கேமிரா, எப்.எம் ரேடியோவுடன் ரூ.300க்கு மொபைல் போன்

கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று ரூ.300க்கு மொபைல் போன் விற்பனை செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டதால்...

ஏ.டி.எம்-இல் பணம் எடுக்க ஆட்கள் தேவை. திருச்சியில் ஒரு வித்தியாசமான விளம்பரம்

பாரத பிரதமர் நரேந்திரமோடி கடந்த மாதம் 8ஆம் தேதி ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவிக்கப்பட்டதில்...