ஓபிஎஸ் வீட்டின் முன் பேசிய ஜெயலலிதா ஆவி. சாமியார் ஏற்படுத்திய பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர் அவரது ஆன்மாவின் ஆணைக்கேற்ப அனைத்து உண்மைகளையும் கூறியதாக சென்னை மெரீனாவில் மெளனத்தை ஓபிஎஸ் எப்போது கலைத்தரோ அதும்முதல் பலர் ஜெயலலிதாவின் ஆவி, ஆன்மா பேசியதாக தங்கள் கருத்துக்களை (கதைகளை) கூறி வருகின்றனர். இன்று கூட பாமக தலைவர் ராமதாஸ், அன்புமணி முதல்வர் ஆவதுதான் ஜெயலலிதாவின் ஆவியின் விருப்பம்' என்று கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
இந்நிலையில் திருவாரூரில் உள்ள சாமியார் ஒருவர் தன்னிடம் ஜெயலலிதாவின் ஆவி இறங்கியதாக கூறிய விஷயங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஓபிஎஸ் அவர்களின் சென்னை வீட்டிற்கு வந்த அந்த சாமியார் நிருபர்கள் முன்னிலையில் திடீரென ஜெயலலிதா பேசியது போலவே பேசினார். அவர் பேசியதாவது:
நான் (ஜெயலலிதா) இறந்துதான் 75 நாட்களாக மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தேன். ஓ.பி.எஸ்சும், தீபாவும் இணைந்து எனது இயக்கத்தை வழி நடத்த வேண்டும். .ஓபிஎஸ்க்கு உறுதுணையாக இருப்பேன். இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற வேண்டும். அவர் என் அன்புக்கு பாத்தியமானவர். அவருக்கு உறுதுணையாக இருப்பேன்.
சதிகாரர்கள் வலையில் சிக்கக்கூடாது சதிகாரர்கள் இயக்கத்தை உடைக்க பார்க்கிறார்கள். அவர்கள் வலையில் விழுந்து விடக்கூடாது. இவ்வாறு அந்த சாமியார் ஜெயலலிதாவின் ஆன்மா பேசுவதுப் போல் பேசினார்.
ஒருபக்கம் ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மம் விலகாத நிலையில் இன்னொரு பக்கம் ஜெயலலிதாவின் ஆவி பேசுவதாக ஆளாளுக்கு கூறி வருவதை பொதுமக்கள் அமைதியுடன் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments