கோபுரத்தில் ஒலித்த தமிழ் மந்திரங்கள்..! 23 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பாக நடந்த தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு.
Send us your feedback to audioarticles@vaarta.com
ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து வானுயுயர்ந்த விமான கோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. உலகப் பாரம்பர்ய சின்னங்களில் ஒன்றாக திகழும் இக்கோயில் தமிழ் மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் உலகப் புகழ் பெற்று விளங்கி வருகிறது.
சோழர்களின் கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் இருந்துவரும் இக்கோயிலின் கட்டுமானத்தை எண்ணி உலக மக்கள் அனைவரும் அதிசயித்து வியந்து வருகின்றனர். இத்தகைய சிறப்புமிக்க பெரிய கோயில் குடமுழுக்கு கடந்த முறை 1997-ம் ஆண்டு நடைபெற்றது.
திரும்பவும் குடமுழுக்கு நடத்த வேண்டும் என ஆன்மிக ஆர்வலர்கள், பெரிய கோயிலின் மீது பெரும் மதிப்பு கொண்டவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தனர். அதன்படி 23 ஆண்டுகளுக்குப் பிறகு பெரும் விமரிசையாக லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது.
110 யாக குண்டங்களுடன் 11,900 சதுர பரப்பளவில் கோயிலுக்கு வெளியே வலதுபுறத்தில் அமைக்கப்பட்ட யாகசாலை பந்தலில் கடந்த 1-ம் தேதி குடமுழுக்கிற்கான யாக பூஜை நடைபெற்றன. 8 காலங்களாக நடைபெற்ற இந்த யாகத்தில் சுமார் 300 சிவாச்சார்யர்கள், தமிழ் ஓதுவார்கள் 80 பேர் கலந்துகொண்டனர். 2,600 கிலோ எடை கொண்ட 124 வகையான மூலிகைப் பொருள்கள் இந்த யாக பூஜைக்குப் பயன்படுத்தப்பட்டன.
தஞ்சை குடமுழுக்கில் தமிழ் மற்றும் சமாஸ்கிருதத்தில் மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் தஞ்சையில் குவிந்துள்ளனர். சுமார் 5000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout