ஜோதிகாவின் தஞ்சை பேச்சு எதிரொலி: அதிரடி நடவடிக்கை எடுத்த கலெக்டர்

சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் பேசிய நடிகை ஜோதிகா, தஞ்சை பெரிய கோவிலுக்கு எதிரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் படப்பிடிப்பு நடக்கும்போது, தான் பார்த்த வரையில் அந்த மருத்துவமனையில் அடிப்படை வசதி கூட இல்லை என்றும் குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு தேவையான வசதிகள் இல்லை என்றும் கூறியிருந்தார்.

தஞ்சை பெரிய கோவில் உள்பட பல கோயில்களுக்கு செலவழிப்பது போல் மருத்துவமனைக்கும் பள்ளிக்கூடத்திற்கு அரசும் பொதுமக்களும் செலவழிக்க வேண்டும் என்றும் அவர் பேசியிருந்தார். இந்த பேச்சு ஒரு சில நெட்டிசன்களால் திரிக்கப்பட்டு, ஜோதிகா தஞ்சை கோவிலுக்கு எதிரான கருத்தை கூறியதாக அவருக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் ஜோதிகா குறிப்பிட்ட தஞ்சை பெரிய கோவிலுக்கு எதிரே உள்ள மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் சமீபத்தில் ஆய்வு செய்ததாகத் தெரிகிறது. ஜோதிகா பேசியதன் எதிரொலியாகத்தான் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாகவும் அந்த மருத்துவமனையில் அவர் கூறியது போல் குறைகள் இருந்தால் அதனை சரி செய்வதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளது.

ஜோதிகாவின் பேச்சை சர்ச்சையாக்கியதன் எதிரொலியாக தற்போது அந்த மருத்துவமனைக்கு விமோசனம் கிடைக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

வாடகை தராததால் மின் இணைப்பை துண்டித்த ஹவுஸ் ஓனர் கைது!

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டு வாடகையை கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என அனைத்து மாநில அரசுகளும் வீட்டு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது

காட்டுக்குள் தனிமையில் இருந்த காதல் ஜோடி: காட்டு காட்டு என காட்டிய காவல்துறையின் ட்ரோன்

ஊரடங்கு உத்தரவையும் மீறி சமூக விலகலை கடைபிடிக்காமல் இருப்பவர்களை காவல்துறையினர் ட்ரோன் மூலம் கண்டுபிடித்து வருகின்றனர் என்பது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

ரஜினியின் கட்டளையை மீறிவிட்டோம்: இயக்குனர் பேரரசு

சூப்ப ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிகர் சங்கம், இயக்குனர் சங்கம் உள்பட நலிவடைந்த கலைஞர்களுக்கு 24 டன்கள் அரிசி, பருப்பு உள்பட மளிகை பொருட்களை வழங்கியுள்ளார்.

தளபதி விஜய்யின் அடுத்த நிதியுதவி குறித்த தகவல்

கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஏழை எளிய மக்களுக்கு திரையுலகினர் பலர் நிதியுதவி செய்து வரும் நிலையில் தளபதி விஜய் ரூ.1.30 கோடி நிதியுதவி செய்தா

சூரரை போற்று குறித்த அடுத்த அறிவிப்பை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள 'சூரரைப்போற்று' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று கொண்டிருந்த