ஜோதிகாவின் தஞ்சை பேச்சு எதிரொலி: அதிரடி நடவடிக்கை எடுத்த கலெக்டர்
- IndiaGlitz, [Friday,April 24 2020]
சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் பேசிய நடிகை ஜோதிகா, தஞ்சை பெரிய கோவிலுக்கு எதிரில் இருக்கும் அரசு மருத்துவமனையில் படப்பிடிப்பு நடக்கும்போது, தான் பார்த்த வரையில் அந்த மருத்துவமனையில் அடிப்படை வசதி கூட இல்லை என்றும் குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு தேவையான வசதிகள் இல்லை என்றும் கூறியிருந்தார்.
தஞ்சை பெரிய கோவில் உள்பட பல கோயில்களுக்கு செலவழிப்பது போல் மருத்துவமனைக்கும் பள்ளிக்கூடத்திற்கு அரசும் பொதுமக்களும் செலவழிக்க வேண்டும் என்றும் அவர் பேசியிருந்தார். இந்த பேச்சு ஒரு சில நெட்டிசன்களால் திரிக்கப்பட்டு, ஜோதிகா தஞ்சை கோவிலுக்கு எதிரான கருத்தை கூறியதாக அவருக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் ஜோதிகா குறிப்பிட்ட தஞ்சை பெரிய கோவிலுக்கு எதிரே உள்ள மருத்துவமனையில் உள்ள வசதிகள் குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் சமீபத்தில் ஆய்வு செய்ததாகத் தெரிகிறது. ஜோதிகா பேசியதன் எதிரொலியாகத்தான் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாகவும் அந்த மருத்துவமனையில் அவர் கூறியது போல் குறைகள் இருந்தால் அதனை சரி செய்வதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளது.
ஜோதிகாவின் பேச்சை சர்ச்சையாக்கியதன் எதிரொலியாக தற்போது அந்த மருத்துவமனைக்கு விமோசனம் கிடைக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
• Tanjore Collector Inspects Government Hospital Post #Jyothika Speech At Recent Award Function Where She Disclosed The Environment Is Not Hygienic | @Suriya_Offl pic.twitter.com/J9qiuLIjOu
— Suriya Fans Team ™ (@SuriyaFansTeam) April 24, 2020