சென்னை போராட்டத்தில் ஈடுபட்ட பார்வையற்ற ஆசிரியர் திடீர் மரணம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் இன்று காலை முதல் நடைபெற்று வரும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டத்தில் கலந்துகொண்ட தஞ்சையை சேர்ந்த தியாகராஜன் என்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் திடீரென மரணமடைந்துள்ளார். இதனால் போராட்டக்காரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக அரசு பழைய ஓய்வுதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே உள்ள ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் ஆகியவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை முதல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து சென்னைக்கு வந்துள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று காலை சென்னை தமிழக தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபம், பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை சென்னை வாலாஜா சாலை, அண்ணா சாலை மற்றும் காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தினர் அவர்களில் ஒருவர் தஞ்சை பாபநாசத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் தியாகராஜன். இவர் உள்பட போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களை போலீசார் கைது செய்து, எழும்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் தங்க வைத்தனர்.
இந்த நிலையில், பள்ளியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆசிரியர் தியாகராஜன் திடீரென மரணமடைந்துள்ளார். பார்வையற்ற மாற்றுத்திறனாளியான அவர், பாபநாசம் பள்ளியில் சிறப்பு ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout