அஜித்தை சந்திக்க 1 கிமீ ஓடிய தஞ்சை ரசிகர்.. ஸ்காட்லாந்தில் நடந்த சம்பவம்..!

  • IndiaGlitz, [Thursday,February 09 2023]

நடிகர் அஜித் தற்போது ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் நிலையில் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த ரசிகர் ஒருவர் அவரை நேரில் பார்ப்பதற்காக 1 கிலோமீட்டர் ஓடி சென்றதாக தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அஜீத் தற்போது ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கவ் என்ற நகரில் தங்கி உள்ளார். இந்த நிலையில் தஞ்சையை சேர்ந்த ரசிகர் ஒருவர் அதே பகுதியில் தனது நண்பர்களுடன் தங்கி கல்லூரியில் படித்து கொண்டு இருக்கும் நிலையில் அஜித் வந்திருப்பதை கேள்விப்பட்டவுடன் அவரை சந்திக்க 1 கிலோமீட்டர் ஓடியதாகவும் அதன் பின்னர் 15 நிமிடங்கள் அவரை தேடி அஜித்தை காபி ஷாப் ஒன்றில் கண்டுபிடித்ததாகவும் பதிவு செய்துள்ளார்.

அஜித்தை பார்த்துவிட்டாலும் அவர் அருகே செல்ல தயங்கிக் கொண்டிருந்த நிலையில் அஜித்தே அவர்களை அழைத்து பேசியதாகவும் பின்னர் அவர்களிடம் போட்டோ எடுத்துக் கொள்ளவதாகவும் 5 நிமிடம் அவர்களிடம் உரையாடிடுவதாகவும் அந்த ரசிகர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பெரிய நடிகர் என்ற பந்தா இல்லாமல் ஜாலியாக தங்களுடன் உரையாடியதாக அந்த ரசிகர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும் ’துணிவு’ படம் நல்லா இருந்தது என ரசிகர் அஜித்திடம் சொல்ல அதனை கேட்ட அஜித், ‘நல்லா இருந்ததா ஓகே சந்தோசம்’ என்று கூறினாராம். மேலும் அஜித் நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரை சொல்லிவிட்டு போனதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவும் அவர் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.