தஞ்சை தேர்த்திருவிழாவில் மின்கம்பி உரசி பயங்கர விபத்து: 11 பேர் பரிதாப பலி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தஞ்சையில் நடந்த தேர் திருவிழாவில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 11 பேர் பலியானதாகவும் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தஞ்சை அருகே களிமேடு அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நள்ளிரவு நடந்தது. நள்ளிரவு முதல் அதிகாலை வரை ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.
இந்தநிலையில் தேர் நகர்ந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதால் தேர் தீப்பிடித்து எரிந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தேரை தண்ணீர் சூழ்ந்திருந்த காரணத்தினால் 50க்கும் மேற்பட்டோர் தள்ளி நின்றதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும், தண்ணீர் இல்லாமல் இருந்திருந்தால் உயிர்ப்பலி அதிகரித்துக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட போது மின்சார கம்பிகள் முறையாக மாற்றி அமைக்கப்படவில்லை என்றும் இதுவே தேர் விபத்துக்கு காரணம் என்றும் அந்த கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தேரை விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையில் திருப்பும்போது மின்கம்பியின் உரசி விபத்து ஏற்பட்டது என்றும், மின் கம்பியை சாலை ஓரத்தில் மாற்றி அமைத்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது என்றும், அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout