காதல், திருமணம் குறித்து தமன்னா கூறிய அதிகாரபூர்வ அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னா, டாக்டர் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவர் விரைவில் அந்த டாக்டரை திருமணம் செய்யவுள்ளதாகவும் ஒருசில இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில் இதுகுறித்து தமன்னா தனது சமூக வலைத்தள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர், அதன் பின்னர் கிரிக்கெட் வீரர் தற்போது டாக்டர். என எனது காதல் வதந்திகள் பரவி வருகின்றது. நான் எனது கணவரை தேடி அலைந்து கடைகடையாக அலைந்து கொண்டிருப்பது போன்ற ஒரு தோற்றத்தை இந்த வதந்திகள் ஏற்படுத்தி வருகின்றன. எந்தவித ஆதாரமும் இல்லாத செய்தியை நான் ஒருபோதும் அனுமதிப்பதில்லை
நான் இப்போது சிங்கிளாக மகிழ்ச்சியாக இருக்கிறேன், என்னுடைய பெற்றோர்கள் எனக்கு தற்போது மாப்பிள்ளை தேடவில்லை. இப்போதைக்கு என்னுடைய கவனம் முழுவதும் சினிமாதால் உள்ளது. எனக்கு யார் மீதும் காதல் ஏற்படவில்லை. நான் படப்பிடிப்பில் தீவிரமாக இருக்கும்போது காதல் எப்படி வரும். இது போன்ற வதந்திகள் எங்கிருந்து, எதற்காக கிளம்புகின்றன என்பது எனக்கு தெரியவில்லை.
இந்த வகையான வதந்திகள் மரியாதை குறைவானது. திருமணம் என்பது புனிதமான ஒன்று. அந்த முடிவை எடுக்கும்போது நிச்சயம் இந்த உலகிற்கு நானே தெரிவிப்பேன். எனவே இதுகுறித்து கற்பனையாக தகவல்களை வெளியிட வேண்டாம். இவ்வாறு வெளிவந்து கொண்டிருக்கும் வதந்திகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்' என்று தமன்னா கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments