முடிவுக்கு வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் வருத்தம் தெரிவித்த தொடர்கதை குழுவினர்.

  • IndiaGlitz, [Monday,April 22 2024]

 

இயக்குனர் S.குமரன் இயக்கத்தில்,நடிகர் தீபக் தினகர் மற்றும் நடிகை நக்ஷத்ரா நாகேஷ் நடித்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த தமிழும் சரஸ்வதியும் சீரியல்.தற்போது இந்த தொடர்கதை முடிவு பெற்ற நிலையில்,அந்த சீரியல் கதாபாத்திரங்கள் அவள் க்ளிட்ஸ் யூடுயுப் சேனலில் அளித்த பேட்டியில்,

தீபக் தினகர் ஒரு தமிழ் தொகுப்பாளர் மற்றும் நடிகர் ஆவார்.பிரைம் டைம் சன் டிவி சீரியலான தென்றல் என்ற தொடர்கதை மூலமாக தமிழ் மக்களின் மனதில் பதிந்தார்.பிறகு ஸ்டார் விஜயில் ஜோடி நம்பர் 1 மற்றும் ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக தன் திறமையை சிறப்புற வெளிப்படுத்தினார்.மேலும் இவர் பல தொடர்கதையிலும் நடித்தவர் என்பது அறியப்பட்டவையே.சென்னை லயோலா கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங்கை ஒரு தொழிலாக ஆரம்பித்து,பிறகு படித்து முடித்து வீடியோ ஜாக்கி ஆனார்.

பின்பு நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும் தொகுப்பாளராக வலம் வந்த இவர்'இவனுக்கு தண்ணில கண்டம்'என்ற திரைப்படத்தில் கதாநாயகனாகவும் வெளிப்பட்டார்.பின்னணி குரல் கலைஞராகவும் சிறந்து விளங்கிய இவர் தென்றல் தொடர்கதைக்கு பிறகு தமிழும் சரஸ்வதி சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

வீடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கி,சன் டிவியில் சன் சிங்கர் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும்,சன் குடும்பம் விருதுகள் மற்றும் தென்னிந்திய இன்டர்நேஷனல் போன்ற விழாக்களுக்கு விருது வழங்குபவராகவும்,திரைப்பட விருது விழாக்கள் மற்றும் ஒரு சில குறும்படங்களில் நடித்து படிப்படியாக தன்னை அடையாளப்படுத்தி கொண்ட நடிகை நக்ஷத்ரா நாகேஷ்.

சென்னை டைம்ஷால் நான்காவதான'தொலைக்காட்சி விரும்பக்கத்தக்க பெண்'என பட்டியலிடப்பட்டார்.சன் தொலைக்காட்சியில் முதன்மையான சீரியலில் முன்னணி கதாபாத்திரங்களை ஏற்று நடித்த நக்ஷத்ரா விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் என்ற தொடர்கதையில் நடிகர் தீபக் தினகர் அவர்களுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்தார்.தற்போது,அந்த சீரியல் முற்று பெறவே அது தொடர்பாக அந்த சீரியலின் கதாநாயகன் மற்றும் கதாநாயகி மேலும் தொடர்கதையின் சக கலைஞர்கள் அனைவரும் அவள் க்ளிட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டிகள் பின்வருமாறு,

இந்த சீரியலை பொறுத்தவரை எல்லோருக்குள்ளேயும் ஒரு நல்ல பந்தம் உருவாகி மிகவும் சிறப்பாகவே இருந்தது.ஒரு சாதாரண தொகுப்பாளினியில் இருந்து இப்போ அக்ட்ர்ஸ் வரைக்கும் என்னோட பயணம் தொடர்ந்து இருக்கு அப்படின்னா அது தமிழ் மக்களால் தான்.இதுக்காக என்னைக்குமே கடமைப்பட்டு இருக்கிறேன்.அதே போல் விகடன் மாதிரியான ஒரு குழுவில் இணைந்து வேலை செய்தற்காக ரொம்பவே சந்தோஷப்படறேன்.

சரியா எங்க எல்லோரையும் வழிநடத்தியதற்கு,சிறப்பா இந்த சீரியலை கொண்டு சென்றதற்கு,தேதி தவறாமல் சம்பளம் கொடுத்ததற்கு எல்லாவற்றிக்கும் நன்றி மேலும் சந்தோசம்.எல்லாரையுமே நல்லா கவனிச்சிப்பாங்க ரொம்பவே நல்ல தயாரிப்பாளர் குழு என்று பெருமையாக சொல்லுவேன்.

தமிழ் மாதிரியான கதாபாத்திரத்தை எங்கும் பார்க்க முடியாது தமிழுக்கு நிகர் தமிழே தான்.சரஸ்வதி கதாபாத்திரம் என் சித்தியுடன் ஒத்து போகும் குணத்தின் அடிப்படையில் சொல்லுவேன்.மேலும் இந்த தமிழ் என்கிற பெயரே எனக்கு மூன்றாவது முறை.இந்த பெயரே என்னை தொடர்ந்து வருகிறது.

நாங்க எல்லோருமே எங்க எல்லோரோட சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டோம்.நிறைய நல்ல நினைவுகளை சேகரித்தோம்.இது வரைக்கும் எங்களை சப்போர்ட் செய்து ஊக்குவித்த மக்களுக்கு நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறோம்.மேலும் ஸ்வாரஸ்யமான மற்றும் கலகலப்பான உரையாடலை தெரிந்து கொள்ள கீழே உள்ள விடியோவை பார்க்கவும்.