'தமிழ்ப்படம்' இயக்குனரின் அடுத்த படத்தில் முன்னணி நடிகர்!

’தமிழ்ப்படம்’ மற்றும் ’தமிழ்ப்படம் 2’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சி.எஸ்.அமுதன் தனது அடுத்த படத்தை ஆரம்பித்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ’தமிழ்ப்படம்’ மற்றும் 2018ஆம் ஆண்டு வெளியான ’தமிழ்ப்படம் 2’ ஆகிய இரண்டு படங்களை இயக்கியவர் சி.எஸ் அமுதன் என்பதும் இவர் இயக்கிய ’ரெண்டாவது படம்’ என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்கும் பணியை இயக்குனர் சி.எஸ்.அமுதன் தொடங்கியுள்ளார். அவரது இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த திரைப்படத்தில் முன்னணி நடிகர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி விட்டதாகவும் புகைப்படத்துடன் கூடிய ஒரு டுவிட்டை தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குனர் சி.எஸ்.அமுதன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்த முக்கிய தகவல்கள் விரைவில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் இணைந்த பிரபல நடிகர்!

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'

தலையெழுத்து எப்படி மாறப்போகிறதோ? பிக்பாஸ் சஞ்சீவ் மனைவியின் பதிவு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வைல்ட்கார்டு போட்டியாளராக தொலைக்காட்சி நடிகர் சஞ்சீவ் எண்ட்ரி ஆகியுள்ள நிலையில் அவரது மனைவி பிரீத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'தலையெழுத்து

படப்பிடிப்பு தொடங்கும் முன்பே 'தளபதி 66' வியாபாரம் தொடங்கிவிட்டதா?

தளபதி விஜய் தற்போது நெல்சன் இயக்கிவரும் 'பீஸ்ட்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்பதும் தெரிந்ததே.

பிரபல நடிகரின் 522வது படத்தில் நயன்தாரா!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய போது அவர் நடிக்க உள்ள 'கனெக்ட்' என்ற திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது என்பதும் இந்த படத்தை 'மாயா' படத்தை இயக்கிய

'மாநாடு' படம் எப்போது ரிலீஸ் என்றே எனக்கு தெரியாது: அமைச்சர் மா சுப்பிரமணியன்

சிம்பு நடித்த 'மாநாடு' படத்திற்காகவே திரையரங்குகளில் தடுப்பு ஊசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியான