அஜித், விஜய், விஜய்சேதுபதியை கலாய்க்கும் 'தமிழ்ப்படம்'

  • IndiaGlitz, [Friday,June 01 2018]

நடிகர் சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கிய 'தமிழ்ப்படம்' நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'தமிழ்ப்படம் 2.0' திரைப்படம் தற்போது தயாராகி விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தின் டீசர் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே முதல் பாகத்தில் கோலிவுட் பிரபலங்கள் நடித்த திரைப்படங்கள் கேலி செய்யப்பட்ட நிலையில் இந்த இரண்டாம் பாகமான 'தமிழ்ப்படம் '2.0' படத்தில் விஜய் நடித்த 'துப்பாக்கி', 'அஜித் நடித்த 'மங்காத்தா' மற்றும் விஜய்சேதுபதி நடித்த 'விக்ரம் வேதா' உள்பட பல திரைப்படங்கள் இந்த டீசரில் கலாய்க்கப்பட்டுள்ளது.

மேலும் சமீபத்தில் பிரபல அரசியல் கட்சி தலைவர் ஒருவர் கண்ணீருடன் பதவியேற்ற காட்சியையும் இந்த படத்தின் குழுவினர் விட்டுவைக்கவில்லை.

வரும் ஜூலை மாதம் வெளியாகும் இந்த படத்தில் சிவா, திஷா பாண்டே, ஐஸ்வர்யா மேனான், சதீஷ், சந்தானபாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜான், நிழல்கள் ரவி உள்பட பலர் நடித்துள்ளனர். கண்ணன் இசையில், கோபி அமர்நாத் ஒளிப்பதிவில், சுரேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஒய்நாட் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளாது.

More News

அதர்வாவின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள 'செம போத ஆகாதே' திரைப்படம் வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அதர்வா தற்போது நயன்தாராவுடன்  'இமைக்கா நொடிகள்' என்ற படம் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

பத்திரிகையாளர்களிடம் வருத்தம் தெரிவித்த ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் நேற்று தூத்துகுடிக்கு சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் தூத்துகுடியிலும் சென்னையிலும் செய்தியாளர்களை சந்தித்தார்.

ரஜினி கடைசி மூச்சு வரை கன்னடராக இருக்க வேண்டும்: கர்நாடக எம்.எல்.ஏ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் கர்நாடகாவில் வெளியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் பிறப்பால் கன்னடராக இருந்தாலும்,

தவறான மனிதர்களை அடையாளம் காட்டிய காலச்சூழல்: ரஜினி குறித்து பாமக ராமதாஸ்

நேற்று தூத்துகுடி சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் எதற்கெடுத்தாலும் போராட வேண்டாம் என்றும், போராடும்போது பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும்,

ஹாலிவுட் இயக்குனருடன் அரவிந்தசாமி ஒப்பிட்ட இளம் இயக்குனர் யார் தெரியுமா?

இளம் இயக்குனர்களில் ஒருவரான கார்த்திக் நரேன் இயக்கிய முதல்படமான 'துருவங்கள் பதினாறு' மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அவர் இயக்கிய படமான 'நரகாசுரன்' படத்தின் நாயகனாக அரவிந்தசாமி நடித்தார்.