ஸ்டாலினை பாராட்டிய ரஜினி மோடியை ஏன் பாராட்டவில்லை. தமிழிசை கேள்வி

  • IndiaGlitz, [Friday,May 19 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று பேசிய அரசியல் குறித்த பேச்சு தமிழக அரசியலில் ஒரு புயலை கிளப்பிவிட்டது. இன்றைய அவருடைய பேச்சால் அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வெகுவிரைவில் வந்துவிடுவார் என்றே ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர். இந்நிலையில் ரஜினியின் அரசியல் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து அனைத்து அரசியல்வாதிகளும் பதில் சொல்லி வருவதை பார்க்கும்போது அவர் அரசியலுக்கு வந்துவிடக்கூடாது என்றே பல அரசியல்வாதிகளின் உள்மனங்களில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் இன்றைய ரஜினியின் பேச்சு குறித்து கருத்து தெரிவிக்கையில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உடையவர்கள், ஜாதிய அரசியல்வாதிகளை புகழ்ந்து பேசியுள்ள ரஜினி, சிறந்த நிர்வாகியான பிரதமர் மோடியை ஏன் புகழ்ந்து பேசவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தமிழிசை மேலும் கூறியதாவது:

சகோதரர் ரஜனிகாந்த் தனக்கென்று தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர். அரசியலிலும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருப்பவர். ஜனநாயக நாட்டில் அரசியலுக்கு வர அவருக்கு முழு உரிமை இருக்கிறது. அரசியலுக்கு வந்தால் வரவேற்போம். அவரது பேச்சு எப்போதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அதற்கு காரணம் யதார்த்தமான நிலைமையை வெளிப்படுத்துவார். ஆனால் இன்று அவரது பேச்சு முரண்பாடாகவே அமைந்து இருக்கிறது. அரசியல் அமைப்பு கெட்டு போய் விட்டது. ஜனநாயகம் கெட்டு விட்டு என்று தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார்.

அதே நேரத்தில் இன்றைய அரசியலில் மு.க.ஸ்டாலின் நல்ல திறமையான நிர்வாகி என்று பாராட்டி இருக்கிறார். தமிழகத்தில் அரசியல் கெட்டு விட்டதாக ஆதங்கப்படும் ரஜினி தி.மு.க.வை பாராட்டி இருப்பது வியப்பாக இருக்கிறது. மு.க.ஸ்டாலினும் அவரது குடும்பமும் தானே இத்தனை ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ தமிழக அரசியல் கெட்டுப் போவதற்கு அவர்களும் ஒரு காரணம் தானே? மாற்றம் வர வேண்டும் என்று எதிர் பார்க்கும் ரஜினி மீண்டும் ஏமாற்றத்தை அங்கீகரிப்பது முரண்பாடாக தெரிகிறது.

பா.ம.க.வின் அன்புமணி ராமதாசை பாராட்டி இருக்கிறார். அவரது நிர்வாகத்தில்தான் மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்தது. அன்புமணி மீதும் வழக்கு இருக்கிறது. திருமாவளவன் தலித்துகளுக்காக பாடுபடுபவர், சீமான் மிகச்சிறந்த பேராளி என்று பாராட்டி இருக்கிறார். இவர்களின் அரசியல் நிலைப்பாடு எல்லோருக்கும் தெரிந்ததே. திருமாவளவன், அன்புமணி போன்றவர்கள் சாதிய பின்புலத்தில் அரசியல் நடத்துபவர்கள்.

நாட்டில் புரையோடிப் போன ஊழலை ஒழித்து நிர்வாக சீர்கேட்டை சீர்படுத்த பிரதமர் மோடி உழைத்து வருகிறார். நடைமுறை சிக்கல்களை தீர்த்து நாட்டை நல்ல பாதையில் வழி நடத்த பாடுபடும் மோடியை அவர் முதலில் பாராட்டி இருக்கலாம். மோடியின் நிர்வாகமும், செயல்பாடும் ரஜினிக்கு தெரியாததல்ல. சிஸ்டத்தில் மாற்றம் வர வேண்டும் என்று ரஜினி எதிர்பார்க்கிறார். அவர் எதிர்பார்க்கும் மாற்றத்தை நிகழ்த்தி வரும் மோடியை அவர் பாராட்டி இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. அவரை பாராட்ட தயங்கியது ஏன்?

44 ஆண்டுகளாக தமிழக கலைத்துறையில் இருப்பவர். தமிழக மக்களால் வளர்ந்தவர். கலைத்துறையில் இருந்து செய்ய முடியாததை அரசியலுக்கு வந்து செய்வார் என்று நம்புவோம். நடிகர்கள் நாட்டை ஆளக் கூடாது என்று பகிரங்கமாக எதிர்ப்பது பா.ம.க. ஒரு காலத்தில் ரஜினியின் படம் ஓட முடியாத சூழ்நிலை கூட உருவானது. வருங்காலங்களில் தனது படத்துக்கு எதிர்ப்புகள் எந்த மூலையில் இருந்தும் வரக்கூடாது என்பதை சரியாக சமாளிக்கும் வகையிலேயே பேசி இருக்கிறார். பாராட்டுக்கள்.

இவ்வாறு தமிழிசை செளந்திரராஜன் கூறியுள்ளார்.

More News

ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து ஓபிஎஸ் கூறியது என்ன?

நீண்ட வருடங்களுக்கு பின்னர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை கடந்த 15ஆம் தேதியில் இருந்து சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்த செய்தியை விட அவர் இந்த நிகழ்ச்சியில் பேசிய அரசியல் குறித்த கருத்து கடந்த ஐந்து நாட்களாக டிரெண்டில் உள்ளது. ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து கிட்டத்தட்ட அனைத்து தமிழக அரசியல்வாதிகளும் கரு

நான் ஒரு பச்சைத்தமிழன் - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பேசியதன் முழுவிபரம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 15ஆம் தேதி முதல் சென்னையில் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். இன்றுடன் முதல்கட்ட ரசிகர்களுடனான சந்திப்பு முடிவடைந்தது. ரசிகர்கள் சந்திப்பின் முதல் நாள் ரஜினி பேசிய சில அரசியல் கருத்துக்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பலவதந்திகள் பரவிய நிலையில் இன்றைய கடைசி தினத்தில் அது

'சென்னை 28' நடிகைக்கு ஆண்குழந்தை

தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியன் மகளும், சென்னை 600028', 'அஞ்சாதே' உள்பட ஒருசில படங்களில் நடித்த நடிகையுமான விஜயலட்சுமிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ரஜினி அரசியலுக்கு வரட்டும்! ஆனால் முதல்வர் ஆகக்கூடாது: சீமான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று ரசிகர்களை சந்தித்தபோது இன்றைய அரசியல் நிலவரம் குறித்தும், ஸ்டாலின், சீமான், அன்புமணி, திருமாவளவன் ஆகியோர்கள் குறித்தும் குறிப்பிட்டார். இந்த நிலையில் தன்னை பற்றி புகழ்ந்து பேசிய போதிலும் ரஜினி தமிழகத்தின் முதல்வர் ஆகக்கூடாது என்று ஆவேசமாக கூறியுள்ளார் நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான்

சிம்பு குரலில் விஷ்ணு விஷாலின் ஆரம்பமும், முடிவும்!

கோலிவுட் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய விஷ்ணுவிஷால், 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' வெற்றிக்கு பின்னர் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பெற்றுவிட்டார். தற்போது அவர் 'கதாநாயகன்,', பொன் ஒன்று கண்டேன்', 'சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்', மின்மினி போன்ற படங்களில் நடித்து வருகிறார்...