முட்டாளாக இருந்தாலும் பரவாயில்லை. தமிழன் தான் முதல்வராகணும். பாரதிராஜா

  • IndiaGlitz, [Tuesday,June 13 2017]

தமிழ்நாட்டை தமிழன் மட்டுமே ஆள வேண்டும் என்று அவ்வப்போது சில அரசியல் தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் கூறி வந்தபோதிலும், முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி முதல்வர்களாக இருந்தபோது இந்த குரல்கள் கொஞ்சம் அடக்கியே வாசிக்கப்பட்டது. ஆனால் தற்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக கூறப்படும் நிலையில் தமிழகத்தை தமிழனே ஆள வேண்டும் என்ற குரல் சற்று ஓங்கி ஒலிக்கின்றது.

அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் சீமான் மற்றும் இயக்குனர் பாரதிராஜா உள்பட பலர் இதுகுறித்து தீவிரமாக தங்களுடைய கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த இயக்குனர் பாரதிராஜா, 'ஆந்திராவிலோ, மராட்டியத்திலோ, கர்நாடகாவிலோ ஒரு தமிழன் முதல்வராக முடியாதபோது தமிழகத்தில் மட்டும் எப்படி இன்னொரு மாநிலத்தை சேர்ந்தவர் முதல்வராக முடியும்.

மற்ற மொழிக்காரர்கள் நம்மோட சகோதர சகோதரிகளாக வாழ்வதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எல்லோரும் சேர்ந்து தொழில் செய்யலாம், அரசியல் பேசலாம், அதில் தப்பில்லை. ஆனால் தலைமைப்பதவி என்ற முதல்வர் பதவியில் ஒரு பச்சைத்தமிழன் தான் இருக்க வேண்டும். ஒருவேளை அவன் முட்டாளாக இருந்தாலும் பரவாயில்லை இந்த மண்ணை ஆள்பவன் ஒரு தமிழனாகத்தான் இருக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

More News

'ஓகே கண்மணி' நாயகனின் அடுத்த தமிழ்ப்படம் குறித்த தகவல்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'ஓகே கண்மணி' படத்தின் நாயகன் துல்கார் சல்மான் தற்போது தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வரும் 'சாவித்ரி' வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெமினிகணேசன் கேரக்டரில் நடித்து வருகிறார்...

கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' டீசர் ரிலீஸ் எப்போது?

உலக நாயகன் கமல்ஹாசனின் கனவுப்படங்களில் ஒன்றான 'விஸ்வரூபம் 2' படத்தின் பணிகள் மீண்டும் சமீபத்தில் தொடங்கப்பட்டு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் தீபாவளி  தினத்தில் இந்த படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

அதர்வாவின் 'வெண்ணிலா தங்கச்சி'யை ரிலீஸ் செய்யும் சமந்தா

அதர்வா, ரெஜினா நடிப்பில் இளவரசு ஓடம் இயக்கி வரும் 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில வாரங்களில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

ஒரே கேரக்டரில் விஜய்-தனுஷ்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தில் பஞ்சாயத்து தலைவர், டாக்டர், மேஜிக்மேன் ஆகிய மூன்று வித்தியாசமான கேரக்டர்களில் விஜய் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே...

வொண்டர் வுமன் திரைவிமர்சனம்

முன்னொரு காலத்தில் ஜூயஸ் என்னும் கடவுள் உலகத்தையும் மனிதர்களையும் படைக்கிறார். மனிதன் அமைதியாக தன் வாழ்க்கையை நடத்துகிறான்.