முட்டாளாக இருந்தாலும் பரவாயில்லை. தமிழன் தான் முதல்வராகணும். பாரதிராஜா
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ்நாட்டை தமிழன் மட்டுமே ஆள வேண்டும் என்று அவ்வப்போது சில அரசியல் தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் கூறி வந்தபோதிலும், முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி முதல்வர்களாக இருந்தபோது இந்த குரல்கள் கொஞ்சம் அடக்கியே வாசிக்கப்பட்டது. ஆனால் தற்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக கூறப்படும் நிலையில் தமிழகத்தை தமிழனே ஆள வேண்டும் என்ற குரல் சற்று ஓங்கி ஒலிக்கின்றது.
அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் சீமான் மற்றும் இயக்குனர் பாரதிராஜா உள்பட பலர் இதுகுறித்து தீவிரமாக தங்களுடைய கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த இயக்குனர் பாரதிராஜா, 'ஆந்திராவிலோ, மராட்டியத்திலோ, கர்நாடகாவிலோ ஒரு தமிழன் முதல்வராக முடியாதபோது தமிழகத்தில் மட்டும் எப்படி இன்னொரு மாநிலத்தை சேர்ந்தவர் முதல்வராக முடியும்.
மற்ற மொழிக்காரர்கள் நம்மோட சகோதர சகோதரிகளாக வாழ்வதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எல்லோரும் சேர்ந்து தொழில் செய்யலாம், அரசியல் பேசலாம், அதில் தப்பில்லை. ஆனால் தலைமைப்பதவி என்ற முதல்வர் பதவியில் ஒரு பச்சைத்தமிழன் தான் இருக்க வேண்டும். ஒருவேளை அவன் முட்டாளாக இருந்தாலும் பரவாயில்லை இந்த மண்ணை ஆள்பவன் ஒரு தமிழனாகத்தான் இருக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com