9 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலால் படுகொலை.. தவெக தலைவர் விஜய் இரங்கல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 குற்றவாளிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தரும் செய்திகள் வெளியாகி உள்ளது. 6 கொடூர நபர்களும் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்து சாக்கு மூட்டையில் பிணத்தை வைத்து சாக்கடையில் எறிந்துள்ளனர்
தற்போது சிறுமியின் பிணம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இந்த விவகாரத்தில் காவல் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் பல அரசியல் கட்சி தலைவர்கள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று குரல் எழுப்பி வரும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சிறுமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி, முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது. பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்கு கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த கொலையாளிகளுக்கு சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது.
— TVK Vijay (@tvkvijayhq) March 6, 2024
பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
சிறுமியை மிருகத்தனமாக,…
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com