9 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலால் படுகொலை.. தவெக தலைவர் விஜய் இரங்கல்..!

  • IndiaGlitz, [Wednesday,March 06 2024]

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 குற்றவாளிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தரும் செய்திகள் வெளியாகி உள்ளது. 6 கொடூர நபர்களும் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்து சாக்கு மூட்டையில் பிணத்தை வைத்து சாக்கடையில் எறிந்துள்ளனர்

தற்போது சிறுமியின் பிணம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இந்த விவகாரத்தில் காவல் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் பல அரசியல் கட்சி தலைவர்கள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று குரல் எழுப்பி வரும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சிறுமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி, முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது. பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்கு கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த கொலையாளிகளுக்கு சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

More News

ராம்சரண், அக்சயகுமார், சச்சின் தெண்டுல்கருடன் செம்ம டான்ஸ் ஆடியோ சூர்யா. ஜாலி வீடியோ..!

ராம் சரண் தேஜா, அக்சயகுமார், சச்சின் டெண்டுல்கர் ஆகியோருடன் சூர்யா டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மகா சிவராத்திரி 2024: விரதம், பூஜை முறைகள் அனைத்தும் இதோ!

திருவிழாக்களைக் கொண்டாடும் இந்த நேரத்தில், சிவபெருமானின் அருளைப் பெற விரும்பும் பக்தர்களுக்கு ஆன்மீக Glitz சிறப்பு வழங்குகிறது.

'தென்மாவட்டம்' இசையமைப்பாளர் சர்ச்சை.. ஆர்கே சுரேஷின் புதிய அறிவிப்பு..!

நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்கே சுரேஷ் நடித்துள்ள 'தென்மாவட்டம்' என்ற திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருப்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் போஸ்டர் வெளியானது.

மகா சிவராத்திரி தினத்தில் தனுஷ் ரசிகர்களுக்கு செம்ம விருந்து.. முக்கிய அறிவிப்பு..!

மகா சிவராத்திரி மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அன்றைய தினத்தில் தனுஷ் ரசிகர்களுக்கு செம்ம விருந்து ஒன்று காத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி

பாஜகவுடன் கூட்டணி வைத்த பிரபல தமிழ் நடிகரின் கட்சி.. வரவேற்பு தெரிவித்த அண்ணாமலை..!

வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக உடன் இணைந்து தேர்தலை சந்திக்க இருப்பதாக பிரபல நடிகர் அறிவித்துள்ளதை அடுத்த அவருடைய கட்சிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.