close
Choose your channels

'தமிழ்ப்படம் 3' சாத்தியமா? இயக்குனர் சி.எஸ்.அமுதன் பதில்

Tuesday, July 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ்ப்படம் 3 சாத்தியமா? இயக்குனர் சி.எஸ்.அமுதன் பதில்

இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கிய 'தமிழ்ப்படம் 2' திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி எதிர்பார்த்த வசூலைவிட அதிக வசூலை குவித்து வருகிறது. கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் போட்டியையும் மீறி இந்த படம் குவித்து வரும் வசூல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக இளையதலைமுறையினர்களை இந்த படம் மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளது

இந்த நிலையில் 'தமிழ்ப்படம் 3' சாத்தியமா என்ற கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் சி.எஸ்.அமுதன், 'தமிழ்ப்படம் 3' படத்தில் நடிகர் சிவா நடிக்க சம்மதித்தால் மட்டுமே சாத்தியம்' என்று கூறியுள்ளார். ஏற்கனவே 'தமிழ்ப்படம் 2' சிவா நடிக்க சம்மதம் தெரிவித்ததால் தான் இயக்கியதாக பேட்டி ஒன்றில் அமுதன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2010ஆம் ஆண்டு 'தமிழ்ப்படம்' வெளிவந்த நிலையில் எட்டு வருடங்கள் கழித்தே அதன் இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளது. இதேபோல் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த படத்தின் அடுத்த பாகம் வருமா? அல்லது குறுகிய இடைவெளியில் மீண்டும் ஒரு ஸ்ஃபூப் படம் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment