'தமிழ்ப்படம் 2.0' படக்குழுவினர்கள் கலாய்ப்பது யாரை?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிவா, திஷா பாண்டே நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கிய 'தமிழ்ப்படம் 2.0' திரைப்படம் ஏற்கனவே மே 25ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகவில்லை. இந்த நிலையில் படக்குழுவினர் இதற்கான காரணத்தை அறிவித்துள்ளனர்.
ஒருசில தொழில்நுட்ப காரணத்தால் 'தமிழ்ப்படம் 2.0' ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஏராளமான கிராபிக்ஸ் பணிகள் நடைபெறவுள்ளது. குறிப்பாக படத்தின் நாயகன் சிவா குறித்த கிராபிக்ஸ் காட்சிகள் லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியாவிலும், நாயகி சாயிஷா குறித்த கிராபிக்ஸ் காட்சிகள் ஆம்ஸ்டர்டாமிலும் நடைபெறுகிறது.
இந்த கிராபிக்ஸ் காட்சிகளின் பணிகள் இருப்பதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும் விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான 'தமிழ்ப்படம்' கிட்டத்தட்ட கோலிவுட் திரையுலகின் முக்கிய நடிகர்களின் படங்களை கலாய்த்த நிலையில் தற்போது இந்த செய்திக்குறிப்பு எந்த படத்தை கலாய்க்கின்றது என்பது அனைவருக்கும் புரிந்ததே. இதுகுறித்து அந்த படத்தின் நிறுவனத்திடம் இருந்து காட்டமாக பதில் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
The official first look of #tp2point0 press release!!! the real reason for the delay of this magnum opus @csamudhan @sash041075 @actorshiva ???????? P.s indha presss release il varum matter yaaraiyum kuripiduvana alla!! pic.twitter.com/0JmY89nqWH
— venkat prabhu (@vp_offl) May 28, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com