அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவிற்கு 20 தொகுதி!

சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் அதிமுக ஈடுபட்டு வருகிறது. முன்னதாக பா.ம.க.விற்கு 23 இடங்களை ஒதுக்கிய அதிமுக தற்போது இன்னொரு கூட்டணி கட்சியான பா.ஜ.க.விற்கு 20 தொகுதிகளை ஒதுக்கி உள்ளது. மேலும் இடைத்தேர்தல் நடக்கவுள்ள கன்னியாகுமரி மக்களவை தொகுதியையும் பா.க.ஜ.விற்கு ஒதுக்கி உள்ளது. பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்பட்ட நிலையில் இன்று காலை இந்த அறிவிப்பு வெளியாகியது.

  • கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டி! கன்னியாகுமரி காங்கிரஸ் மக்களவை எம்.பி H.வசந்தகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அத்தொகுதி காலியான நிலையில் வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலின்போதே கன்னியாகுமரி தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இத்தொகுதியை அதிமுக, கூட்டணி கட்சியான பாஜகவிற்கு ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பை ஒட்டி அத்தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று டெல்லி பாஜக தலைமை தகவல் தெரிவித்து உள்ளது. [ 16.45 ]
  • அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகல்! அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு விலகுவதாக நடிகரும் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் தெரிவித்து உள்ளார். மேலும் 84 தொகுதிகளில் தனித்து போட்டியிடப் போவதாகவும் அவர் அறிவித்து உள்ளார். [ 16.48 ]
  • வன்னியர் 10.5% இடஒதுக்கீட்டுக்கு மறவர் நலக் கூட்டமைப்பு எதிர்ப்பு! தமிழகம் பின்பற்றி வரும் இடஒதுக்கீட்டு நடைமுறையில் வன்னியர் சாதிக்கு 10.5% உள் இடஒதுக்கீட்டுக்கான அரசாணை சமீபத்தில் கையெழுத்தாகியது. இந்த உள் இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறவர் நலக் கூட்டமைப்பினர் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இந்த ஏற்பாடு சீர்மரபினர், பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு எதிராக அமையும் எனவும் கருத்துத் தெரிவித்து உள்ளனர். [ 16.58 ]