சிஎஸ்கே மேட்ச் பார்க்க சென்றது ஒரு குற்றமா? திடீரென கிளம்பிய திருமண வதந்தி.. 'தமிழும் சரஸ்வதியும்' நடிகை விளக்கம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்த நிலையில் இந்த போட்டியில் சிஎஸ்கே அணி 7 வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இருப்பினும் இந்த போட்டியை காண ஏராளமான சின்னத்திரை மற்றும் பெரிய திரை நட்சத்திரங்கள் நேரில் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நேற்றைய போட்டியை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பார்த்த நட்சத்திரங்களில் ஒருவர் ’தமிழும் சரஸ்வதியும்’ என்ற தொலைக்காட்சி சீரியலில் நடித்த தர்ஷ்னா என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது ’பூவா தலையா’ என்ற சன் டிவி தொடரில் நாயகி ஆக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் நடிகை தர்ஷ்னா நேற்றைய மேட்சை பார்ப்பதற்காக சென்ற போது அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின. அந்த புகைப்படங்களில் அவரது கழுத்தில் தாலி போன்ற மஞ்சள் கயிறு என்பதை பார்த்து ரசிகர்கள் அவருக்கு திருமணம் ஆகி விட்டதா என்ற கேள்வியை எழுப்பினர். இந்நிலையில் அது மஞ்சள் கயிறு தாலி இல்லை, விசில் என்று நடிகை தர்ஷ்னா விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால் தர்ஷ்னா அதிகாலை எழுந்து விளக்கம் அளிப்பதற்கு முன்பே விடிய விடிய அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு கிரிக்கெட் என்றால் ரொம்ப பிடிக்கும் என்று அதுவும் சிஎஸ்கே மேட்ச் என்றால் கண்டிப்பாக பார்ப்பேன் என்றும் அதனால் தான் நேற்றைய போட்டியை நான் பார்த்து வீரர்களை என்கரேஜ் செய்தேன் என்றும் தெரிவித்தார்.
அடுத்தடுத்து நான் கண்டிப்பாக மேட்சு பார்க்க செல்வேன் என்று அவர் கூறிய நிலையில் தாலிக்கயிறு குறித்து கமெண்ட்க்கு 'அது தாலி இல்லை விசில், சத்தியமாக இந்த அளவுக்கு இந்த புகைப்படம் டிரெண்டாகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, காலையில் எழுந்திருக்கும் போது தான் பார்த்து விளக்கம் அளித்தேன்’ என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments