'மெர்சல்' படத்தில் ஜிஎஸ்டி காட்சியை நீக்க வேண்டும்: தமிழிசை
- IndiaGlitz, [Thursday,October 19 2017]
தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் வழக்கம்போல் விஜய்யை பிடிக்காதவர்கள் இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் ஜிஎஸ்டி குறித்த ஒரு வசனம் கடைசி காட்சியில் இடம்பெற்றிருக்கும். 8% ஜிஎஸ்டி வரி வாங்கும் சிங்கப்பூர், பொதுமக்களுக்கு இலவச மருத்துவ வசதியை தருகிறது. ஆனால் 28% வரி வாங்கும் நம் நாட்டில் ஏன் இலவச மருத்துவ வசதி இல்லை' என்ற வசனம் உள்ளது.
இந்த வசனத்திற்கு விஜய் ரசிகர்களை மட்டுமின்றி நடுநிலை ரசிகர்களையும் கவர்ந்த நிலையில் இந்த வசனத்தை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவ்வாறு காட்சியை நீக்காவிட்டால் இதுகுறித்து வழக்கு தொடரப்படும் என்றும் பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கருத்து கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
சென்சார் அனுமதித்த ஒரு வசனத்தை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று ஒரு கட்சியின் தலைவரே கூறுவது எந்த அளவுக்கு நியாயம் என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.