'த்ரிஷ்யம் 2' படத்தை தன்னுடைய படத்துடன் ஒப்பிட்ட 'தமிழ்ப்படம்' இயக்குனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியான மோகன்லால் மற்றும் ஜீத்து ஜோசப்பின் ’த்ரிஷ்யம் 2’திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தை தமிழ் உள்பட அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே வெங்கடேஷ் மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கும், ’த்ரிஷ்யம் 2’தெலுங்கு ரீமேக் படத்தின் பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ’த்ரிஷ்யம் 2’படத்தின் வெற்றியை தனது படத்தின் இரண்டாம் பாக படத்தின் வெற்றியோடு ஒப்பிட்டு ’தமிழ்ப்படம்’ இயக்குனர் சி.எஸ்.அமுதன் காமெடியாக டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
’இரண்டாம் பாகமாக வெளிவந்த இரண்டாவது சிறந்த படம்’ என்று இயக்குனர் சிஎஸ் அமுதன் தனது டுவிட்டரில் ’த்ரிஷ்யம் 2’ படம் குறித்து பதிவு செய்துள்ளார். அப்படியானால் முதல் சிறந்த படம் அவருடைய ’தமிழ்ப்படம் 2’ என்பதை மறைமுகமாக அவர் குறிப்பிட்டு உள்ளதாகவே நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பொதுவாக தமிழில் வெளியான பெரும்பாலான இரண்டாம் பாக திரைப்படங்கள் முதல் பாகம் போல் வெற்றியடையாமல் தோல்வி அடைந்துள்ளன என்பதும், அதில் சி.எஸ்.அமுதன் இயக்கிய ‘தமிழ்ப்படம் 2’ படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’த்ரிஷ்யம் 2’ பட வெற்றியை தனது படத்துடன் ஒப்பிட்டது அவரது படத்தின் காமெடியை விட சிறப்பாக இருப்பதாக நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
Drishyam2 blew my mind. It’s the second best sequel ever made.
— CS Amudhan (@csamudhan) February 20, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com