வெள்ளம் குறித்த கவலை வேண்டாம்: தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள நீரிலைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாகவும், இதனால் சென்னைக்கு மீண்டும் வெள்ள ஆபத்து இருப்பதாகவும் அதிகாரபூர்வமற்ற செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். சென்னை நகரில் இதுவரை 150மிமீ மழை பெய்துள்ளதாகவும், கடந்த 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் பதிவான அதிக மழை இதுதான் என்று கூறியுள்ள வெதர்மேன், வெள்ளம் குறித்து சென்னை மக்கள் கவலை கொள்ள தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.
அணைகள் மற்றும் ஏரிகள் நிறைவதற்கு நமக்கு மழை அவசியம் தேவை என்று பதிவு செய்துள்ள அவர், மழைநிற்கும் வரை வீட்டில் பொதுமக்கள் நிம்மதியாக பாதுகாப்புடன் இருக்க அறிவுறித்தியுள்ளார். பிபிசி செய்தி குறித்து தற்போது கவலைப்பட தேவையில்லை என்றும், வரும்போது பார்த்துக்கலாமே' என்றும் அவர் கூறியுள்ளார். மின்சாரம் துண்டிக்கப்படும் வாய்ப்பு இருப்பதால் மொபைல் போன்களை சார்ஜ் செய்து வைத்து கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ள தமிழ்நாடு வெதர்மேன், மழை குறித்த விபரங்களை அவ்வப்போது பதிவு செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout