வெள்ளம் குறித்த கவலை வேண்டாம்: தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,November 03 2017]

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள நீரிலைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாகவும், இதனால் சென்னைக்கு மீண்டும் வெள்ள ஆபத்து இருப்பதாகவும் அதிகாரபூர்வமற்ற செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். சென்னை நகரில் இதுவரை 150மிமீ மழை பெய்துள்ளதாகவும், கடந்த 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் பதிவான அதிக  மழை இதுதான் என்று கூறியுள்ள வெதர்மேன், வெள்ளம் குறித்து சென்னை மக்கள் கவலை கொள்ள தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

அணைகள் மற்றும் ஏரிகள் நிறைவதற்கு நமக்கு மழை அவசியம் தேவை என்று பதிவு செய்துள்ள அவர், மழைநிற்கும் வரை வீட்டில் பொதுமக்கள் நிம்மதியாக பாதுகாப்புடன் இருக்க அறிவுறித்தியுள்ளார். பிபிசி செய்தி குறித்து தற்போது கவலைப்பட தேவையில்லை என்றும், வரும்போது பார்த்துக்கலாமே' என்றும் அவர் கூறியுள்ளார். மின்சாரம் துண்டிக்கப்படும் வாய்ப்பு இருப்பதால் மொபைல் போன்களை சார்ஜ் செய்து வைத்து கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ள தமிழ்நாடு வெதர்மேன், மழை குறித்த விபரங்களை அவ்வப்போது பதிவு செய்யப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

More News

கனமழை எதிரொலி: தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க வருவாய் நிர்வாக ஆணையர் வேண்டுகோள்

இலங்கை அருகே ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக கடந்த ஐந்து நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

மழையால் பாதித்த மக்களுக்கு ஜி.வி.பிரகாஷின் மகத்தான உதவி

சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டை ஞாபகப்படுத்தும் வகையில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பல மணி நேரம் கனமழை பெய்து வருவதால்

மாணவர்களின் கோரிக்கை ஏற்பு: அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னையில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. அதுமட்டுமின்றி சாலைவழி போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

நான் இந்திய பிரஜை: எங்கு வேண்டுமானாலும் சொத்து வாங்க எனக்கு உரிமை உண்டு: அமலாபால் அறிக்கை

கடந்த சில தினங்களாக நடிகை அமலாபால் புதுவையில் உள்ள முகவரியில் சொகுசுக்கார் வாங்கியதாக ஒருசில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த நிலையில், அமலாபால் கார் வாங்கியதில் எந்தவித முறைகேடும் இல்லை

ஆரம்பமாகிறது த்ரிஷாவின் 'பரமபத விளையாட்டு

தமிழ் சினிமாவில் கடந்த 15 வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை த்ரிஷா, தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.