சென்னை மழை ஜஸ்ட் மிஸ் ஆயிருச்சு: தமிழ்நாடு வெதர்மேன்
Send us your feedback to audioarticles@vaarta.com
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக நல்ல மழை பெய்து வரும் நிலையில் நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலையில் சென்னையிலும் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது
இந்த நிலையில் இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் ’சென்னைக்கு மிக அருகில் தோன்றும் ஒரு சிவப்பு தக்காளி இன்னும் சற்று நகர்ந்து இருந்தால் சென்னையில் மழை சும்மா பிச்சு உதறி இருக்கும் என்றும், ஆனால் ஜஸ்ட் மிஸ் ஆகிவிட்டது என்றும், இனிமேல் சென்னைக்கு பெரிய அளவில் மழை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்
மேலும் நாளை சென்னையில் நடைபெறவிருக்கும் கிரிக்கெட் போட்டிக்கு எந்த பாதிப்பும் வராது என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் தன்னை திட்டாமல் போட்டியை ரசிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் கடலோர மாவட்டங்களில் ஓரளவுக்கு மழையை எதிர்பார்க்கலாம் என்றும் ஆனால் பெரிய எதிர்பார்ப்பு வேண்டாம் என்றும் அவர் தனது முக நூலில் தெரிவித்துள்ளார்
ஏற்கனவே தென் மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு தினங்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
KTCC Rain update - Please move in Red thakkali, refresh panni panni, finger paining !!! If this moves in semma intense spells can be expected Chennai in short period.
— TamilNadu Weatherman (@praddy06) December 13, 2019
(for other places please refer the previous post posted in morning / evening) pic.twitter.com/TLQ6X7FQvw
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments