ரஜினியின் பதிவு தவறுதான்: தமிழ்நாடு வெதர்மேன் கருத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் கொரோனா வைரஸை 12 முதல் 14 மணி நேரம் வரை பரவாமல் தடுத்துவிட்டாலே மூன்றாம் நிலைக்கு செல்வதை தடுக்க முடியும் என்றும், எனவே பொதுமக்கள் அனைவரும் 12 முதல் 14 மணி நேரம் வெளியே வராமல் இருந்தாலே போதும் அந்த வைரஸ் செத்துவிடும் என்று பேசியிருந்தார்.
ரஜினிகாந்தின் என்ற கருத்து தவறானது என்றும் 12 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் இறந்து விடும் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்றும் பலர் சுட்டிக் காட்டியதை அடுத்து டுவிட்டர் இந்தியா அவருடைய வீடியோவை அதிரடியாக நீக்கியது.
இதுகுறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினியின் இந்த கருத்து குறித்து கூறிய போது ’ரஜினியின் கருத்து தவறு தான் என்றும், ரஜினிகாந்த் நல்ல நோக்கத்தோடு அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கலாம் என்றும், ஆனால் அதே நேரத்தில் அவர் கூறியது தவறான கருத்துதான் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் 12 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் செத்து விடும் என்பதற்கு எந்தவிதமான ஆய்வுகளும் இதுவரை நிரூபணம் செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார். ஆனால் அதே நேரத்தில் அவர் சுய ஊரடங்கு உத்தரவு குறித்து தெரிவித்த கருத்தை நான் வரவேற்கிறேன் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Though Rajini sir has posted the video with good intentions, it must be treated as a fake message which has spread like wildfire. Note the virus does not die in 12 hours and no such research document is present anywhere to substantive the claim.
— TamilNadu Weatherman (@praddy06) March 21, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments