ரஜினியின் பதிவு தவறுதான்: தமிழ்நாடு வெதர்மேன் கருத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் கொரோனா வைரஸை 12 முதல் 14 மணி நேரம் வரை பரவாமல் தடுத்துவிட்டாலே மூன்றாம் நிலைக்கு செல்வதை தடுக்க முடியும் என்றும், எனவே பொதுமக்கள் அனைவரும் 12 முதல் 14 மணி நேரம் வெளியே வராமல் இருந்தாலே போதும் அந்த வைரஸ் செத்துவிடும் என்று பேசியிருந்தார்.

ரஜினிகாந்தின் என்ற கருத்து தவறானது என்றும் 12 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் இறந்து விடும் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்றும் பலர் சுட்டிக் காட்டியதை அடுத்து டுவிட்டர் இந்தியா அவருடைய வீடியோவை அதிரடியாக நீக்கியது.

இதுகுறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினியின் இந்த கருத்து குறித்து கூறிய போது ’ரஜினியின் கருத்து தவறு தான் என்றும், ரஜினிகாந்த் நல்ல நோக்கத்தோடு அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கலாம் என்றும், ஆனால் அதே நேரத்தில் அவர் கூறியது தவறான கருத்துதான் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் 12 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் செத்து விடும் என்பதற்கு எந்தவிதமான ஆய்வுகளும் இதுவரை நிரூபணம் செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார். ஆனால் அதே நேரத்தில் அவர் சுய ஊரடங்கு உத்தரவு குறித்து தெரிவித்த கருத்தை நான் வரவேற்கிறேன் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

சுய ஊரடங்கு உத்தரவு எதிரொலி: தெருவில் நடந்த திருமணம்

இன்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 14 மணி நேரம் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல்

இன்று ஒருநாள் மட்டும் சுய ஊரடங்கு உத்தரவு போதுமா?

கொரோனா வைரஸ் காரணமாக இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 14 மணி நேரம் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் பொதுமக்கள் அனைவரும் சுய ஊரடங்கு உத்தரவை

தன்னை தானே தனிமை படுத்திகொண்ட மணிரத்னத்தின் மகன்

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா Covid-19 (novel வைரஸ் ஒருவரது உடலில் 14 நாட்கள் வரையிலும் தங்கிவாழும் தன்மைக் கொண்டது

ரஜினியை அடுத்து இன்னொரு பிரபல நடிகரின் டுவீட்டும் நீக்கம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று டுவிட்டரில் பதிவு செய்துள்ள வீடியோவை டுவிட்டர் இந்தியா அதிரடியாக நீக்கியது என்பது தெரிந்ததே. கொரோனா வைரஸ் குறித்து அவர் கூறிய கருத்து சந்தேகத்திற்கு

மார்ச் 21 வரலாற்றில்  இன்று!!! உலக பொம்மலாட்ட தினம், உலக கவிதை தினம்… இன்னும் பிற…

உலகம் முழுவதும் கொரோனா பீதியில் இருக்கும்போது வரலாற்றில் முக்கியமான நாட்களையும் தினங்களையும் பற்றிய நினைவில்லாமலே கடந்து செல்லும் சூழல் உருவாகி இருக்கிறது.